AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரேஷன் அட்டையில் கைரேகை பதிவு செய்து விட்டீர்களா.. உடனே செக் பண்ணுங்க.. முக்கிய தகவல்!

Add Fingerprints of Family Members In Ration Card | ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களின் உண்மை தன்மையை சோதிக்க கை ரேகை பதிவு செய்ய மத்திய அரசு 2024-ல் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், தமிழகத்தில் இன்னும் 28 லட்சம் ரேஷன் அட்டை தாரர்கள்ம் கை ரேகை பதிவு செய்யாமல் உள்ளனர்.

ரேஷன் அட்டையில் கைரேகை பதிவு செய்து விட்டீர்களா.. உடனே செக் பண்ணுங்க.. முக்கிய தகவல்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Feb 2026 12:21 PM IST

இந்தியாவில் (India) உள்ள அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய அம்சமாக ரேஷன் கடைகள் (Ration Shops) உள்ள நிலையில், ரேஷன் கார்டு (Ration Card) குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, அந்தியோதயா, முன்னுரிமை ரேஷன் கார்டுகள் வைத்திருப்போர் விரல் ரேகை சாரிபார்ப்பு வாயிலாக உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என உணவுத் துறை அறிவுறுத்துயுள்ளது. இந்த நிலையில், உணவுத் துறை வெளியிட்டுள்ள இந்த முக்கிய அறிவிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.

உண்மை தன்மையை உறுதி செய்ய கைரேகை சரிபார்ப்பு

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் சுமார் 2.22 கோடி ரேஷன் அட்டைகளுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, துவரும் பருப்பு, பாமாயில் ஆகிய பொருட்கள் மானிய விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த 2.22 கோடி கார்டுகளில் 93 லட்சம் முன்னுரிமை கார்டுகள் மற்றும் 18.45 லட்சம் அந்தியோதயா கார்டுகள் உள்ளன. இந்த வகை குடும்ப அட்டை வைத்துள்ளவர்களுக்கு அரிசி மற்றும் கோதுமை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : Gold Price : நான்காவது நாளாக தொடர் உயர்வை சந்தித்த தங்கம்.. ரூ.15,000-த்தை நெருங்கியது!

முன்னுரிமை கார்டு வைத்திருப்பவர்களுக்கு தலா 5 கிலோ அரிசியும், அந்தியோதயா கார்டு வைத்திருப்பவர்களுக்கு தலா 35 கிலோ அரிசியும் வழங்கப்படுகிறது. இந்த இரண்டு வகை கார்டுகளிலும் மொத்தமாக சுமார் 3.65 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களின் உண்மை தன்மையை கண்டறிய அனைத்து மாநிலங்களுக்கும் 2024 ஆம் ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, ரேஷன் கடைகள் மூலம் கைரேகை இணைக்கப்பட்டு உண்மை தன்மை உறுதி செய்யப்பட்டு வருகிறது.

கை ரேகை பதிவு செய்யாத 28 லட்சம் ரேஷன் கார்டு தாரர்கள்

மொத்தம் 3.65 கோடி உறுப்பினர்களின் உண்மை தன்மையை சரிபார்க்க மத்திய அரசு உத்தவிட்டிருந்த நிலையில், இன்னும் 28 லட்சம் பேர் இன்னும் ரேஷன் கார்டுகளில் தங்களது கை ரேகையை பதிவு செய்யாமல் உள்ளனர். இந்த நிலையில், உண்மை தன்மையை சரிபார்க்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே ரேஷன் கார்டுகளில் கை ரேகை பதிவு செய்யாமல் உள்ளவர்கள் விரைந்து கை ரேகை பதிவு செய்ய வேண்டிய கட்டாய ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : நிதி மேலாண்மைக்கு நடுத்தர வர்கத்தினர் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்!

ஒருவேளை கைரேகை பதிவு செய்யாமலே இருக்கும் பட்சத்தில் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us