AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி 24 மணி நேரமும் ரேஷன் பொருட்களை பெறலாம்?.. விரைவில் அமலுக்கு வரும் தானிய ஏடிஎம் மையங்கள்!

Grain ATMs To Be Introduced In India Soon | தற்போது ரேஷன் கடைகளில் நடைமுறையில் உள்ள விநியோக முறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், மத்திய அரசு ஒரு அசத்தல் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இனி 24 மணி நேரமும் ரேஷன் பொருட்களை பெறலாம்?.. விரைவில் அமலுக்கு வரும் தானிய ஏடிஎம் மையங்கள்!
உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 23 Feb 2026 15:42 PM IST

இந்தியாவில் உள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடுமங்களுக்கான ஒரு சிறந்த திட்டமாக ரேஷன் கடைகள் (Ration Shops) செயல்பட்டு வருகின்றன. வருமை கோட்டின் கீழ் உள்ள பொதுமக்களுக்கு மானிய விலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமன்றி, அரசாங்கம் வழங்கும் நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவித்தொகைகளும் இந்த ரேஷன் அட்டைகள் மூலமே பொதுமக்களை சென்று சேறுகின்றன. ரேஷன் கடைகள் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், அதன் மூலம் மோசடிகள் நடைபெறுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், அரசும் மோசடிகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ரேஷன் கடைகளில் புதிய அம்சம் ஒன்றை அரசு அறிமுகம் செய்துள்ளது.

ரேஷன் கடைகள் மூலம் நடைபெறும் மோசடிகளை தடுக்க புதிய அம்சம்

ரேஷன் கடைகள் மூலம் ஒவ்வொரு ரேஷன் கார்டின் வகைக்கு ஏற்ப அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் வாழங்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்வதில் மோசடிகள் நடைபெறுவதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இந்த நிலையில் தான் தானே இயங்கி ஏடிஎம் இயந்திரத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக குஜராத்தில் இந்த திட்டத்தை உள்துறை அமைச்சர் அமித்ச்ஷா தொடங்கி வைத்துள்ளார். இது படிப்படியாக நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : இரவோடு இரவாக ஷாக் கொடுத்த டிரம்ப்.. உலகளாவிய வரியை 10% முதல் 15% ஆக உயர்த்தியுள்ளார்!

அன்னபூர்த்தி ஏடிஎம் இயந்திரத்தின் சிறப்புகள் என்ன என்ன?

அன்னபூர்த்தி என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஏடிஎம் இயந்திரங்கள் வெறும் 35 விநாடிகளில் 25 கிலோ அரிசியை விநியோகம் செய்கிறது. இந்த புதிய நடைமுறையின் மூலம் ரேஷன் பொருள் விநியோகத்தில் நடைபெறக்கூடிய மோசடிகள் கட்டுப்படுத்தப்படும் என்றும், ரேஷன் பொருள் விநியோக நடைமுறையே முழுவதும் வெளிப்படை தன்மை கொண்டதாக மாறிவிடும் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இன்னும் மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் இந்த திட்டம் இந்தியா முழுவதும் பயன்பாட்டுக்கு வரும் என்று அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : வெறும் ரூ.355 முதல் தொடங்கும் காப்பீட்டு திட்டம்.. அஞ்சலங்கள் மூலம் அரசு வழங்கும் அட்டகாசமான சலுகைகள்!

இந்த தானிய ஏடிஎம் மையங்களை பயன்படுத்த ரேஷன் அட்டை தாரர்களுக்கு ஒரு டிஜிட்டல் கார்டு வழங்கப்படும் என்றும், அதனை பயன்படுத்தி பொதுமக்கள் 24 மணி நேரமும் தானியங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.