AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IndvsEng : 2வது ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் விளையாடுவாரா? வெளியான தகவல்

முதல் ஒருநாள் போட்டியின் போது இந்திய கேப்டன் சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர் பாதியிலேயே வெளியேறினார். இந்த நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் அவர் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

IndvsEng : 2வது ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் விளையாடுவாரா?  வெளியான தகவல்
சுப்மன் கில்
Karthikeyan S
Karthikeyan S | Published: 16 Jul 2026 17:35 PM IST

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரு அணிகள் மோதும் 2வது போட்டி ஜூலை 16, 2026 இன்று கார்டிஃபில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2 – 0 என்ற கணக்கில் வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தப் போட்டியின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

முதல் போட்டியில் பாதியில் வெளியேறிய கில்

இந்த நிலையில் முதல் ஒருநாள் போட்டியின் போது இந்திய கேப்டன் சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர் பாதியிலேயே வெளியேறினார். இந்த நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் அவர் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில் சுப்மன் கில் குறித்த முக்கிய ஒன்று வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க : ICC World Cup: 14 அணிகள், 3 சுற்றுகள்.. உலகக் கோப்பைக்கான வடிவத்தை மாற்றிய ஐசிசி!

பர்மிஹ்காமில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி258 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய அணிக்கு கேப்டன் சுப்மன் கில் 80 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். ஒரு பக்கம் சீனியர் வீரர்களான வீராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சொதப்ப, பொறுப்பாக ஆடி அணியை மீட்டெடுத்தார்.

2வது ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் விளையாடுவாரா?

இருப்பினும் அவரால் முழுமையாக இன்னிங்ஸை முடிக்க முடியவில்லை. போட்டியின் 26வது ஓவரில் பேட்டிங் செய்த சுப்மன் கில்குக்கு திடீரென் காலில் தசை பிடிப்பு ஏற்பட்டதால் மிக அவதிப்படார். இதனால் அவர் பாதியில் வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் கடைசியில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேல் ஆகியோல் அரைசதம் அடித்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர்.

இதையும் படிக்க : CSK New Coach: தோனி கையில் சிஎஸ்கே பயிற்சியாளர் தேர்வு.. உற்றுநோக்கும் ரசிகர்கள்..!

இதனையடுத்து இங்கிலாந்துக்கு எதிராக 2வது ஒருநாள் போட்டியில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. தற்போது வெளியான தகவலின் படி அவர் முழுமையான உடல் தகுதியுடன் இருப்பதாககவும், அவருக்கு கால் தசைபிடிப்பு மட்டுமே என்பதால் 2வது ஒருநாள் போட்டியில் விளையாடுவதில் எந்த பிரச்னையும் இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இந்திய ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us