AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் புதுச்சேரி வருகை.. விழா ஏற்பாடுகள் தீவிரம்!

Union Home Minister Amit Shah : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிற ஜூலை 18 அல்லது 25- ஆம் தேதிகளில் புதுச்சேரிக்கு வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து, தமிழகத்துக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் புதுச்சேரி வருகை.. விழா ஏற்பாடுகள் தீவிரம்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 16 Jul 2026 17:40 PM IST

இந்தியாவில் மக்கள் பாதுகாப்பு, மாநில பாதுகாப்பு, அவசர கால மீட்பு மற்றும் மனிதாபிமான சேவைகளில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்கான சான்றாக இந்திய காவல் துறையின் உயரிய விருதாக ஜனாதிபதியின் வண்ண விருது வழங்கப்படுகிறது. தற்போது, இந்த விருதானது புதுச்சேரி மாநில காவல் துறைக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, புதுச்சேரி மாநில காவல் துறைக்கு வண்ண விருதை வழங்குவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிற ஜூலை 18- ஆம் தேதி ( சனிக்கிழமை) அல்லது ஜூலை 25- ஆம் தேதி ( சனிக்கிழமை) புதுச்சேரி வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய உள்துறை அமைச்சரின் வருகையையொட்டி, புதுச்சேரியில் கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கோரிமேடு மைதானத்தில் விழா மேடை அமைக்கும் பணிகள்

இதில், விழா மேடை, தரைதள பணிகள் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை காவல் கண்காணிப்பாளர் நல்லாம் கிருஷ்ணராய பாபு, காவல் ஆய்வாளர் பாபு ஆகியோர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், விழா நடைபெறும் பகுதியில் மேடை அமைக்கும் பணி, அலங்கார விளக்குகள் மற்றும் அலங்கார வளைவுகள் உள்ளிட்டவை அமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்கு காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன் மற்றும் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: விஜயபாஸ்கர்களுக்கு சிக்கல்.. சபாநாயகர் உத்தரவுக்கு எதிராக அதிமுக வழக்கு.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

போலீசார் தீவிர அணிவகுப்பு பயிற்சி

இந்த நிகழ்வில் பங்கேற்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை காவல்துறை சார்பில் மரியாதை அளித்து வரவேற்பதற்காக போலீசார் காலை மற்றும் மாலை வேளைகளில் தீவிர அணிவகுப்பு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். புதுடெல்லியில் இருந்து சென்னைக்கு விமான மூலம் மத்திய அமைச்சர் அமித்ஷா வருகை தர இருப்பதாகவும், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக புதுச்சேரிக்கு வருகை தர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை

இதற்காக புதுச்சேரி மாநிலத்தில் அரசு சார்பில் பல்வேறு கட்ட முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதுச்சேரியில் இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. அங்கு, அரசியல் சூழல், பாஜக மாநில தலைவர் மாற்றம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தெரிகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தற்போது வரை அரசு தரப்பில் இருந்து வெளியாகவில்லை.

மேலும் படிக்க: பாமகவில் மீண்டும் பூகம்பம்.. அன்புமணிக்கு எதிராக அருள் தரப்பினர் போர்க்கொடி!

Follow Us