பாஜகவுடன் கூட்டணி அமைக்க திமுக- அதிமுக முயற்சி.. 4 மத்திய அமைச்சர் பதவிகளை பெறவும் திட்டம்.. நிர்மல் குமார் குற்றச்சாட்டு!
Minister CTR Nirmal Kumar : தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்காக பாஜகவுடன் திமுக மற்றும் அதிமுக கூட்டணி அமைக்க முயற்சித்து வருவதாகவும், 4 மத்திய அமைச்சர் பதவிகளை பெற திட்டமிட்டிருப்பதாகவும் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டினார் .
தமிழகத்தில் பாஜகவுடன் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்க முயற்சித்து வருவதாகவும், இதில், திமுக, அதிமுகவை சேர்ந்த 4 பேருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க இருப்பதாகவும் மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார் குற்றஞ்சாட்டி உள்ளார். இது தொடர்பாக, சென்னையில் தலைமைச் செயலகத்தில் மெய்ஞான நேரம் கூறியதாவது: தமிழகத்தில் பாஜக, அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறது. வரும் சில ஆண்டுகளில் அதிமுக மற்றும் திமுக தங்களது கட்சிகளை நடத்த முடியாமல், பாரதிய ஜனதா கட்சியுடன் தங்களது கட்சிகளை இணைக்க உள்ளனர். அத்துடன், திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு. க. ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் குடும்பத்தை சேர்ந்த தலா இருவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம்.
திமுக, அதிமுகவை காப்பாற்றும் எண்ணம் இல்லை
ஏனென்றால் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளை நடத்தும் எண்ணமோ, காப்பாற்றும் எண்ணமோ அவர்களுக்கு இருப்பது போல தெரியவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர்களான எம். ஜி. ஆர்., ஜெயலலிதா உருவாக்கிய அதிமுக என்ற கட்சியை மொத்தமாக பாஜகவிடம் அடமானம் வைத்துவிட்டு, அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் அறிக்கைகள் மட்டும் வெளியிட்டுக் கொண்டு ஒரு கட்சியை காப்பாற்றி விடலாம் என்ற நிலைமைக்கு அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வந்துள்ளார்.
மேலும் படிக்க: சி.வி சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சி பதவி பறிப்பு – எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை..




தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க
திராவிட முன்னேற்றக் கழகத்தில் என்ன செய்ய வேண்டும். இந்த கட்சியை யாரிடம் நம்பி ஒப்படைக்க வேண்டும். என்பது எதுவும் தெரியாமல் அந்தக் கட்சியின் தலைவர் மு. க. ஸ்டாலின் குழம்பிப் போய் உள்ளார். தற்போது, 5 ஆண்டு காலத்தை ஓட்டுவதற்கு ஒரு நிலையான இடம் தேவைப்படுகிறது. இதற்காகவே பாரதிய ஜனதா கட்சியுடன் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணிக்கு செல்ல தயாராக உள்ளனர். இந்த முயற்சிக்காகவே அவர்கள் கடந்த 50 நாட்களாக தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தவெக எம்எல்ஏவிடம் ரூ. 50 கோடி வரை பேரம்
அதன் அடிப்படையிலேயே, தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த ஊத்தங்கரை தொகுதி எம்எல்ஏவான இளையராஜாவிடம் ரூ.50 கோடி வரை பேரம் பேசி உள்ளனர். தமிழக வெற்றிக் கழக அரசை எப்படியாவது தவிர்க்க வேண்டும் என்பதற்காக குறுக்கு வழியில் ஈடுபடும் மு. க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி கடைசியாக பாஜகவுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: விஜயபாஸ்கர்களுக்கு சிக்கல்.. சபாநாயகர் உத்தரவுக்கு எதிராக அதிமுக வழக்கு.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!