அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது புதிய IRCTC இணையதளம்.. என்னவெல்லாம் மாறியுள்ளது?
IRCTC New Website Launched | முன்பு இருந்த ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பயணிகள் சில சிக்கல்களை எதிர்க்கொண்டு வந்தனர். இந்த நிலையில் தான், புதிய மேம்படுத்தப்பட்ட ஐஆர்சிடிசி இணையதளத்தை பயணிகளுக்காக இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.
இந்திய பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரதானமாக உள்ளது தான் ரயில் போக்குவரத்து. ரயில்களில் குறைந்த விலை அதிக தூரம் பயணம் செய்ய முடியும் என்பதாலும், மிக குறைவான விலையில் பயணம் செய்ய முடியும் என்பதாலும், லட்சக்கணக்கான சாமானிய மக்கள் தேர்வாக ரயில்கள் உள்ளது. இவ்வாறு பயணிகள் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பயணம் செய்ய பிரதான இணையதளமாக செயல்பட்டு வந்த ஐஆர்சிடிசி (IRCTC – Indian Railway Catering and Tourism Corporation) இணையதளம், தற்போது புதுப்பொலிவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் என்ன என்ன மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
விரைவான சேவைகளை பெற புதிய ஐஆர்சிடிசி இணையதளம் அறிமுகம்
ஐஆர்சிடிசி இணையதளத்தை பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கைகள் தான் தேவையற்ற பாப்-அப்கள், மின்னும் விளம்பரங்கள், மீண்டும் மீண்டும் கேட்கப்படும் கேப்ட்சாக்கள் ஆகியவை. இவற்றின் காரணமாக டிக்கெட் முன்பதிவு செய்யும்போது சவால்களை சந்திப்பதாக பயணிகள் தொடர்ந்து புகார் எழுப்பி வந்தன. இந்த நிலையில், பயணிகளின் புகார்களின் அடிப்படையில் இந்த சிக்கல்கள் அனைத்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், இனி மிக விரைவாகவும், எளிதாகவும் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
இதையும் படிங்க : பிரபலமாக உள்ள தங்க மியூச்சுவல் ஃபண்ட்.. முதலீடு செய்வதில் உள்ள சாதக, பாதகங்கள் என்ன என்ன?




புதிய இணையதளத்தில் எதெல்லாம் எளிதாக மாறியுள்ளது?
முன்பு ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஸ்லீப்பர், ஏசி என ஒவ்வொரு வகுப்புகளுக்கும் தனியாக தேட வேண்டியது இருக்கும். ஆனால், இந்த புதிய இணையதளத்தில் அனைத்து வகுப்புகளின் டிக்கெட்டுகளையும் ஒரே திரையில் பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல, ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தேவைப்படும் படிநிலைகளும் இந்த புதிய இணையதளத்தில் குறைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : SCSS : மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்.. 5 ஆண்டுகளுக்கு ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்
பழைய ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஒரு நிமிடத்திற்கு வெறும் 32,000 ரயில் டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். ஆனால், இந்த புதிய இணையதளத்தின் மூலம் ஒரு நிமிடத்தில் 1.5 லட்சம் டிக்கெட் முன்பதிவுகளை கையாள முடியும் என கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, ஒரு நிமிடத்தில் 40 லட்சம் Enquiries-களை கையாளும் வகையில் சர்வர் மேம்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.