AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Kishan Das: கிஷன் தாஸ் – சஞ்சனாவின் ‘சீ யூ’ பட ஃபர்ஸ்ட் சைட் வீடியோ வெளியானது!

See U Movie Teaser: ஹரிஷ் கல்யாணின் லப்பர் பந்து படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சஞ்சனா கிஷ்ணமூர்த்தி. இவர் கதாநாயகியாக கிஷன் தாஸுடன் இணைந்து நடித்துள்ள புது படம்தான் சீ யூ. இப்படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது இப்படத்தின் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

Kishan Das: கிஷன் தாஸ் – சஞ்சனாவின் ‘சீ யூ’ பட ஃபர்ஸ்ட் சைட் வீடியோ வெளியானது!
சீ யூ திரைப்பட டீசர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 16 Jul 2026 18:25 PM IST

இளம் நடிகராக தமிழில் பிரபலமானவர் நடிகர் கிஷன் தாஸ் (Kishan Das). இவரின் நடிப்பில் இறுதியாக தமிழில் வெளியான திரைப்படம் அரோமலே (Aaromaley). இந்த படமானது கடந்த 2025ம் ஆண்டில் வெளியாகியிருந்த நிலையில், நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தின் இயக்குநர் சாரங் தியாகு (Director Sarang Thiagu) இயக்க, மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படமானது அதிரடி காதல் மற்றும் எமோஷனல் கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்திற்கு பின் கிஷன் தாஸ் நடித்துள்ள புதிய திரைப்படம்தான் சீ யூ (See U). இந்த படத்தை இயக்குநர் சந்தோஷ் ஸ்ரீவட்சன் (Santhosh Srivatsan) இயக்க, ஏ.ஆர். என்டேர்டைமெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் கிஷன் தாஸ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி (Sanjana Krishnamoorthy) நடித்துவருகிறார்.

இவர் ஹரிஷ் கல்யாணின் லப்பர் பந்து படத்தின் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், இதன் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். தற்போது வெளியான இது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: சன் டிவியில் விரைவில் நிறைவடையும் பிரபல சீரியல்.. இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்!

கிஷன் தாஸ் மற்றும் சஞ்சனாவின் சீ யூ படத்தின் டீசரை வெளியிட்ட நடிகர் தனுஷ்:

கிஷன் தாஸின் சீ யூ படத்தின் டீசர் எப்படி இருக்கு :

இந்த படமானது காதல் எமோஷனல் போன்ற கதைக்களத்தில் தயாராகியுள்ளதாக தெரிகிறது. இதில் கிஷன் தாஸ் ஒரு ஓவியராகவும், குடும்பத்தை மதிக்கும் நபராகவும் நடித்துள்ளார். மேலும் நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஒரு லாயராக நடித்துள்ளார். ஒரு நல்ல உறவிற்கும் முடிவு இருக்கும் என்பது போன்ற ஒரு காதல் கதைக்களம் கொண்ட படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிஷன் தாஸின் சீ யூ படத்தின் ரிலீஸ் எப்போது:

இந்த சீ யூ படமானது காதல் எமோஷனல் போன்ற கதைக்களத்தில் உருவாகிவருகிறது. இந்த படத்தில் கிஷன் தாஸ், அக்ஷரா ஹரிஹரன் மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஸினெம் இசையமைத்துவருகிறார்.

இதையும் படிங்க: முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் பட FDFS காட்சிகள் எப்போது? முழு விவரங்கள் இதோ!

சமீபத்தில் இப்படத்தின் முதல் பார்வை நடிகர் ஆர்யா வெளியிட்டிருந்தார். அந்த வகையில் தற்போது தனுஷ் இப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார். தற்போது இதன் டீசர் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

Follow Us