சன் டிவியில் விரைவில் நிறைவடையும் பிரபல சீரியல்.. இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்!
Sun TV Popular Serial End: தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தொலைக்காட்சி சீரியல்கள் என்றாலே பிரபலமானது சன் டிவிதான். இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்த பிரபல சீரியல் ஒன்று நிறைவுக்கு வந்துள்ளதாம். அதன் கிளைமேக்ஸ் காட்சிக்கான ஷூட்டிங் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமான தொலைக்காட்சிதான் சன் டிவி (Sun TV). இந்த தொலைக்காட்சிதான் ஒட்டுமொத்த தமிழ் சீரியல்களில் டாப் டிஆர்பி (Top TRP Serials) கொண்ட சீரியல்களை கொண்டுள்ளது. சன் டிவியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் இருந்தும், இந்த தொலைக்காட்சி சீரியல்களுக்கு பெயர்போனது. இந்த தொலைக்காட்சியில் சிங்கப்பெண்ணே (Singapennae), எதிர்நீச்சல், வினோதினி (Vinodhini) மற்றும் மூன்று முடுச்சி என கிட்டத்தட்ட பல பிரபல சீரியல்கள் ஒளிபரப்பாகிவருகிறது. இந்த தொலைக்காட்சிக்கு போட்டியாக தமிழில் பல சீரியல்களை ஒளிபரப்பிவரும் தொலைக்காட்சிதான் விஜய் டிவி. இந்த தொலைக்காட்சியிலிருந்து டாப் 5 டிஆர்பி ரேட்டிங்கை நிச்சயம் ஒரு சீரியலாவது பிடித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவந்த பிரபல சீரியல் ஒன்று நிறைவடையவுள்ளதான்.
இந்த சீரியலின் கிளைமேக்ஸ் காட்சிக்கான ஷூட்டிங் நடைபெற்றுவரும் நிலையில், அப்போது எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. அது எந்த சீரியல் தெரியுமா?. வேறெதுவும் இல்லை வினோதினி என்ற சீரியல்தான்.




இதையும் படிங்க: அருண் பிரபு இயக்கும் தனது அடுத்த படத்தை சிவகார்த்திகேயனே தயாரிக்கிறார் – வைரலாகும் தகவல்
சன் டிவி வினோதினி சீரியல் கிளைமேக்ஸ் காட்சி குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:
View this post on Instagram
சன் தொலைக்காட்சி வினோதினி சீரியல் :
சன் டிவியில் கடந்த 2025ம் ஆண்டில் மே மாதத்தின் இறுதியில் தொடங்கிய புத்தம் புது சீரியல்தான் வினோதினி. இந்த தொலைக்காட்சி தொடரானது திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 1 மணியளவில் ஒளிபரப்பாகிவரும். குடும்ப கதைக்களத்தில் வெளியாகிவந்த இந்த சீரியல், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவந்தது. ஒரு பெண் தனது கணவனை இழந்து, தனது இரு குழந்தைகளை எவ்வாறு வளர்க்கிறார் என்பது குறித்த கதையில் இது வெளியாகிவந்தது. இந்த சீரியலில் முக்கியமான வேடத்தில் நடிகர் ஆர்த்திகா, அரவிந்த் ஆகாஷ், கிருஷ்ணா மற்றும் ரியா மனோஜ் போன்ற பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர்.
இதையும் படிங்க: என் நண்பன் ஒரு பைத்தியம்… தயன் ஸ்ரீனிவாசன் பேச்சிற்காக முதலமைச்சர் விஜயிடம் மன்னிப்பு கோரிய அஜு வர்கீஸ்
காதல் மற்றும் குடும்பம் பொதுப்போக்கு சீரியலாக இது இருந்துவந்தது. இதுவரை கிட்டத்தட்ட 1 ஆண்டுக்கும் மேல் இது ஒளிபரப்பாகிவந்த நிலையில், தற்போது முடிவிற்கு வந்துள்ளதாம். இப்படத்தின் கிளைமேக்ஸ் நெருங்கிய நிலையில், இன்னும் சில நாட்களுக்குள் இந்த சீரியல் முழுவதுமாக நிறைவடையவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இதன் ஷூட்டிங் குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.