AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Jason Sanjay: நிச்சயம் நானும் அவர்களில் ஒருவனாக மாறுவேன் – ஜேசன் சஞ்சய்!

Jason Sanjay Young Directors: தமிழக முதலமைச்சர் விஜய்யின் மூத்த மகன்தான் இயக்குநர் ஜேசன் சஞ்சய். இவரின் இயக்கத்தில் சிக்மா என்ற படமானது உருவாகியுள்ள நிலையில், இதன் மூலமாக இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். சினிமாவில் தனக்கு பிடித்த இளம் இயக்குநர்கள் குறித்து ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

Jason Sanjay: நிச்சயம் நானும் அவர்களில் ஒருவனாக மாறுவேன் – ஜேசன் சஞ்சய்!
ஜேசன் சஞ்சய், பிரதீப் ரங்கநாதன் மற்றும் அபிஷன்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 16 Jul 2026 16:42 PM IST

தமிழ் சினிமாவில் இயக்குநராக சிக்மா (Sigma Movie) என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியவர் ஜேசன் சஞ்சய் (Jason Sanjay). இவர் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் (CM Vijay) மகன் ஆவார். இவர் முன்பு விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் என்ற படத்தில் “நா அடிச்சா தங்கமாட்ட” என்ற பாடலில் சிறுவனாக நடனமாடியிருந்தார். அதில் அவரின் தந்தை விஜய்யுடன் ஜேசன் சஞ்சய் இணைந்து நடனமாடி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தார். தற்போது அவர் சினிமாவில் இயக்குநராக நுழைந்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் (Lyca Productions) நிறுவனத்தின் தயாரிப்பில் , உருவாகியுள்ள சிக்மா படத்தில் சந்தீப் கிஷன் (Sundeep Kishan) ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில், 2026ம் ஆண்டு ஜூலை 31ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது ஜூலை 23ம் தேதியில் ஜன நாயகன் படம் (Jana Nayagan) வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதன் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுகிறதாம். அண்மையில் பத்திரிக்கை நேர்காணல் ஒன்றில் பேசிய ஜேசன் சஞ்சய், தனக்கு பிடித்த இளம் இயக்குநர்கள் மற்றும் அவர்களின் திறமை குறித்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: என் நண்பன் ஒரு பைத்தியம்… தயன் ஸ்ரீனிவாசன் பேச்சிற்காக முதலமைச்சர் விஜயிடம் மன்னிப்பு கோரிய அஜு வர்கீஸ்

தனக்கு பிடித்த மற்றும் உத்வேகமான் இயக்குனர்கள் குறித்து ஜேசன் சஞ்சய் பேசிய விஷயம்:

அந்த நேர்காணலில் பேசியிருந்த ஜேசன் சஞ்சய், “நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் புதிய சென்சேஷன் இயக்குநர்களின் புது மேக்கிங் படைப்புகள் எனக்கு பிடிக்கும். இப்போது எனக்கு பிரதீப் ரங்கநாதன் மற்றும் அபிஷன் ஆகியோரின் படைப்புகள் எனக்கு பிடிக்கும். அவர்கள் இருவருமே இயக்கம் மற்றும் நடிப்பு இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு ஈர்க்கவைக்கிறார்கள். நிச்சயம் நானும் பிரதீப் மற்றும் அபிஷனைப் போல திறமையான ஒருவனக்குவேன். இதுபோன்ற திறமையாளர்கள் தொடர்ந்து வரவேண்டும்” என அதில் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பிரபாஸின் ஃபௌஸி படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? அட இந்த தேதியிலா?

சிக்மா படம் குறித்து இயக்குநர் ஜேசன் சஞ்சய் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

சிக்மா படத்தின் மூலம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள நிலையில், இப்படத்தில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். வரும் ஜூலை 23ம் தேதியில் ஜன நயகன் படம் வெளியாக காத்திருக்கும் நிலையில், சிக்மா படமானது வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸ் செய்யப்படும் என கூறப்படுகிறது.

Follow Us