AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Kadhal Kadhal Kadhal: காதல் காதல் காதல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் புது நடிகை.. அட இவரா?

Kadhal Kadhal Kadhal Serial: தமிழில் பிரபலமான சின்னத்திரை தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருந்த்துவருவதுதான் விஜய் டிவி. இந்த தொலைக்காட்சியில் தற்போது காதல் காதல் காதல் என்ற புது சீரியல் ஒளிபரப்பாகிவருகியது. இந்த சீரியலில் பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சி நடிகை இணைவதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Kadhal Kadhal Kadhal: காதல் காதல் காதல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் புது நடிகை.. அட இவரா?
காதல் காதல் காதல் சீரியல்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 10 Jul 2026 21:01 PM IST

தமிழ் சினிமாவிற்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் உண்டோ, அதுபோலவே தின்தோறும் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு (Tamil Serials) ரசிகர்கள் அதிகம். அதிலும் சன் டிவி (Sun Tv) மற்றும் விஜய் டிவி ?(Vijay Tv) என இந்த இரு தொலைக்காட்சிகளுக்கு நடுவே டிஆர்பி ரேட்டிங் (TRP Rating) போட்டியே நிலவும். சன் டிவியானது சீரியல்களுக்கு பிரபலமான நிலையில், விஜய் டிவி சீரியல் மற்றும் ரியாலிட்டி நிகழ்கிகளுக்கு பிரபலம். அந்த விதத்தில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் புதிதாக சீரியல் ஒன்று ஒளிபரப்பாகிவருகிறது. அதுதான் காதல் காதல் காதல் (Kadhal Kadhal Kadhal). நடிகர் அருண் பிரசாத் (Arun Prasath), சுசித்ரா ஷெட்டி (Suchitra Shetty) உள்ளிட்ட பிரபலங்கள் இந்த சீரியல் இணைந்து நடித்துவருகிறார். இந்த சீரியலானது கடந்த 2026ம் ஆண்டு ஜூலை 6ம் தேதியிலிருந்து ஒளிபரப்பாக தொடங்கியிருந்தது.

புது சீரியலாக இருந்தாலும், தற்போது ரசிகர்கள் மத்தியில் இதற்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. காதல் காதல் காதல் சீரியலானது, 3 காதலை மையமாக கொண்டு ஒளிபரப்பப்பட்டுவருகிறது. தற்போது இந்த சீரியலில் புது நடிகை ஒருவர் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ரன்பீர் கபூரின் ராமாயணா பட ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது இருக்கும்? – வைரலாகும் தகவல்!

காதல் காதல் காதல் சீரியலில் இணையும் புது நடிகை:

இந்த சீரியலானது காதலே பிடிக்காத தந்தையின், 3 மகன்கள் காதலில் விழுந்து திருமணம் செய்வது தொடர்பான கதைக்களத்தில் இது உருவாக்கப்பட்டவருகிறது. இதில் பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் நடிகர் அருண் பிரசாத் முக்கிய நடிகராக நடிக்கிறார். இவருக்கு இந்த சீரியலில் ஜோடி யார் என இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதையும் படிங்க: கொடைக்கானலில் அய்யனார் துணை சீரியல் குடும்பம்.. இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்!

அருணுக்கு ஜோடியாக, ஜீ தமிழ் நடிகை சுசீத்ரா நடிக்கவுள்ளாராம். இவர் ஜீ தமிழில் அண்ணா சீரியலில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. காதல் காதல் காதல் சீரியல் தொடங்கிய நிலையில், ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு பின் சுசீத்ரா இணைவார் என கூறப்படுகிறது.

காதல் காதல் காதல் சீரியலில் சுசீத்ரா இணைவது குறித்து வைரலாகும் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Hemalatha V (@tamilserialexpress)

காதல் காதல் காதல் சீரியல் நடிகர்கள் :

இந்த சீரியலில் நடிகர் அருண் பிரசாத் லீட் நடிகராக நடித்துவரும் நிலையில், அவருடன் மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு, மலையாள சின்னத்திரை பிரபல நலீப் கியா நடிகர்களாக நடிக்கிறார்கள். மேலும் அவர்களுடன் முத்தழகு சீரியல் நடிகை ஷோபனா, தங்கமகன் சீரியல் நடிகை மனுஸ்ரீ மற்றும் பிக் பாஸ் பிரபல ரியா போன்ற பிரபலங்கள் இணைந்து நடிக்கிறார்கள். மேலும் அந்த மூன்று ஹீரோக்களின் அம்மவாக பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுசித்ரா ஷெட்டி நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us