இனி அரைமணி நேரமில்ல 1 மணி நேரம்.. விஜய் டிவியில் இனி ஒரு மணிநேரம் வெளியாகும் சீரியல் எது தெரியுமா?
Vijay TV Serials: தமிழில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து பல சீரியலாக் வெளியாகிவருகிறது. இது அனைத்தும் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவரும் நிலையில், விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியல் ஒன்று இனிமேல் 1 மணிநேரம் ஒளிபரப்பாகவுள்ளதாம். அது எந்த சீரியல் என்பது குறித்து விவரங்கள் இதோ.
சின்னத்திரை தொலைக்காட்சிகளில் மக்கள் மத்தியில் மிகவும் நெருக்கமான டிவியாக இருந்துவருவது விஜய் தொலைக்காட்சி (Vijay Tv). இந்த டிவியில் சீரியல்கள் முதல் ரியாலிட்டி நிகழ்ச்சிவரை பல தினந்தோரும் வெளியாகிவருகிறது. குறிப்பாக விஜய் தொலைக்காட்சி சீரியலுக்காக மிகவும் பிரபலமானது. குடும்பங்கள் கொண்டாடும் பல சீரியல்கள் இந்த தொலைக்காட்சிகளில் வெளியாகிவருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (Pandian Stores 2) சீரியல் குடும்ப ரசிகர்களை ஈர்த்து வருகிறது. அதே போலவே மதுமிதா நடித்துவரும் அய்யனார் துணை (Ayyanar Thunai serial) போன்ற சீரியல்களை இந்த இடத்தல் உள்ளது. அதிலும் எப்போதுமே டிஆர்பி ரேட்டிங்கில் (TRP Rating) விஜய் தொலைக்காட்சியில் அய்யனார் துணை சீரியல் இருந்துவந்த நிலையில், தமிழ் டாப் 5 சீரியல்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.
விஜய் டிவியில் எக்கச்சக்க சீரியல்கள் வெளியாகிவரும் நிலையில், தற்போது சீரியல் ஒன்று கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் ஒளிபரப்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த சீரியல் எது தெரியுமா?. வேறேதுமில்லை சின்ன மருமகள் சீரியல்தான் (Chinna Marumagal Serial). இந்த சீரியல் இனி இரவு 9:30 மணி முதல் 10:30 மணிவரை கிட்டத்தட்ட 1 மணிநேரம் ஒளிபரப்பாகிறதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதுகுறித்த தகவல்கள் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: விஜய் டிவியில் வரப்போகும் ஒண்ணா இருக்க கத்துக்கணும் சீரியல்.. வெளியான புரோமோ இதோ!
சின்ன மருமகள் சீரியல் குழு வெளியிட்ட புது புரோமோ குறித்த இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவு:
View this post on Instagram
விஜய் டிவியில் நேரம் மாற்றம் செய்யப்பட்ட சீரியல்கள் லிஸ்ட் :
விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிரபலமாகி ஒளிபரப்பாகிவந்த மகாநதி (Mahanadhi Serial) சீரியலானது நிறைவடைய உள்ளது. இதன் காரணமாக “ஒண்ணா இருக்க கத்துக்கணும்” (Onna Irukka Kathukanum Serial) என்ற புது சீரியல் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த சீரியல் வரும் 2026ம் ஆண்டு ஜூன் 29ம் தேதியில் ஒளிபரப்பாகவுள்ள நிலையில், நேரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் பல சீரியல்களை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம்.
இதையும் படிங்க: ‘அவருக்குள் பல திட்டங்கள் இருந்தது.. ஒரு பெரிய தலைவரை மிஸ் செய்துவிட்டோம்’ – லதா ரஜினிகாந்த் பேச்சு!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இரவு 7:30 மணிக்கும், அழகே அழகு இரவு 8 மணிக்கும், சின்ன மருமகள் சீரியல் 9:30 -10:30 மணிக்கும் மற்றும் கனா கண்டேனடி இரவு 10 மணிக்கும் ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. புது சீரியல்கள் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள நிலையில், தற்போது பழைய சீரியல்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.