இந்த போட்டோவில் சிலம்பரசனுடன் இருக்கும் முக்கிய பிரபலம்.. அது யார் தெரியுமா?
Vallavan Shooting Set Photo: தென்னிந்திய சினிமாவில் பிரபலங்களின் அடையாளம் தேடியாத புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகிவருவது வழக்கம். அந்த விதத்தில் சிலம்பரசனுடன் இந்த போட்டோவில் இருக்கும் பிரபலம் யாருனு தெரியுமா?. இவர் தற்போது உச்ச இயக்குநர்களில் ஒருவரை ஆவார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.
தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் சிலம்பரசன் (Silambarasan). இவர் சினிமாவில் வெறும் நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராகவும் படத்தை இயக்கியுள்ளார். மன்மதன் (Manmadhan) படத்தில் இவர் இயக்குநராக பணியாற்றியிருந்தாலும், இவர் முழுமையாக இயக்கிய படம் வல்லவன் (Vallavan). இப்படத்தில் சிலம்பரசன், ரீமாசென் (Remassen) மற்றும் நயன்தாரா (Nayanthara) உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். கடந்த 2006ம் ஆண்டில் வெளியாகியிருந்த இப்படமானது மக்கள் மத்தியில் கலவையான வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. அந்த புகைப்படத்தில் சிலம்பரசனுக்கு அருகே நிற்கும் நபர் தற்போது பிரபலமான ஒருவராம்.
சிலம்பரசன் பக்கத்தில் இருக்கும் அந்த நபர் வேறுயாருமில்லை கோலிவுட் பிரபல இயக்குநர் நெல்சன் திலீப்குமார்தான் (Nelson Dilipkumar). இவர் சிலம்பரசனின் நெருங்கிய நண்பர் என்ற நிலையில், வல்லவன் படத்தில் இவரும் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நெல்சன் திலீப்குமாரின் அடையாளம் தெரியாத இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: அனிருத்துக்கு பிடிச்ச நடிகை யார் தெரியுமா? அவரே சொன்ன விஷயம்!
இயக்குநர் நெல்சன் திலிப்குமாரின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கடந்த 2018ம் ஆண்டில் வெளியான கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். இதில் நயன்தாரா லீட் நாயகியாக நடித்திருந்த நிலையில், யோகி பாபு அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் டாக்டர் என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் இவருக்கு எதிர்பாராத வரவேற்பை கொடுத்த நிலையில், தனது 3வது படத்தையே தளபதி விஜயை வைத்து இயக்கியிருந்தார். இப்படம் விமர்சனகள் ரீதியாக பேசப்பட்டிருந்தாலும், நல்ல வரவேற்பு இருந்தது.
இதையும் படிங்க: திருமணத்தின் விழாவில் சொன்ன சபதத்தை நிறைவேற்றிய விஜய் தேவரகொண்டா.. அவரே வெளியிட்ட விஷயம் இதை பாருங்க!
மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 1 மற்றும் 2 படத்தை இயக்கியிருக்கிறார். இவர் கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குனராக நுழைந்தாலும், அதற்கு முன் சிலம்பரசனுடன் வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்குவதாக இருந்தது ஆனால சில காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டது. இதையடுத்து கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பின் சினிமாவில் இயக்குநராக நுழைந்து, தற்போதுவரையில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துவருகிறார். இவரின் இயக்கத்தில் உருவாகிவரும் ஜெயிலர் 2 படமானது 2026ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.