Vijay Sethupathi: விக்ரம் படத்தில் எனக்கு மூணு பொண்டாடி வைப்பதற்கு காரணம் இதுதான் – கலகலப்பாக விஜய் சேதுபதி பகிர்ந்த விஷயம்!
Vijay Sethupathi About Vikram Movie; தென்னிந்திய சினிமாவில் பிரபல கதாநாயகனாக தொடர்ந்து படங்களில் நடித்துவருபவர் விஜய் சேதுபதி. முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய இவர், கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் தான் நடித்திருந்த கதாபாத்திரத்திற்கு, மூன்று மனைவி வைப்பதற்கு காரணம் என்ன என்பது பற்றி விளக்கமாக பேசியுள்ளார்.
கோலிவுட் சினிமாவை தனது சாதாரணமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்துவருபவர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). ஆரம்பத்தில் சினிமாவில் அங்கீகரிக்கப்படாத வேடத்தில் நடித்துவந்த இவர், தற்போது தென்னிந்திய சினிமாவே போற்றும் நாயகனாக நடித்துவருகிறார். இவர் தமிழ் சினிமாவையும் கடந்து, தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் இயக்குநர் பூரி ஜெகன்நாத் (Puri Jaganadh) இயக்கத்தில் தெலுங்கில் ஹீரோவாகவும் அறிமுகமாகியுள்ளார். இவ்வாறு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துவருகிறார். இவர் நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் படங்களை தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவர் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் கமல்ஹாசன் (Kamal Haasan) போன்ற பல்வேறு நடிகர்களின் படங்களில் வில்லனாகவும் நடித்து மிகுந்த பிரபலத்தை பெற்றிருந்தார். இந்நிலையில் முன்பு பேட்டி ஒன்றில் பேசிய விஜய் சேதுபதி, விக்ரம் (Vikram) படத்தில் மூன்று மனைவிக்கு கணவனாக நடித்ததற்கு காரணம் என்ன என்பது பற்றி கூறியுள்ளார்.




இதையும் படிங்க: இந்த சிறுவன் யாருனு தெரியுமா? தென்னிந்திய சினிமாவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நடிகர்.. அட இவர்தான்!
விக்ரம் படத்தில் மூன்று மனைவிக்கு கணவனாக நடித்தது குறித்து கலகலப்பாக பேசிய விஜய் சேதுபதி:
அந்த நேர்காணலில் பேசிய விஜய் சேதுபதி, விக்ரம் படத்தில் நான் ஆரம்பத்தில் வெறும் சிங்கிள் ஆணாகவே நடிப்பதாக இருந்தது. அதையடுத்து இவ்வாறு ஒரு புத்திசாலியான ஆண் சிங்கிளாக இருப்பான், அதற்கு பிறகே எனக்கு மூன்று பொண்டாடி இருப்பதுபோல கதை மாற்றியமைக்கப்பட்டது. மேலும் நான் அந்த மனைவிகளுக்கு நிறைய குழந்தைகள் இருந்தால் நன்றாக இருக்கும் என சொன்னேன்.
இதையும் படிங்க: ரவி மோகன் மீது மீண்டும் குற்றச்சாட்டை வைத்த ஆர்த்தி – என்ன நடந்தது
லோகேஷ் உடனே, “வேண்டாம் அண்ணா-னு சொல்லிட்டாரு”. இவ்வளவு புத்திசாலியான நபர், போதைப்பொருள் கடத்தலை தவிர, வேறு ஒரு தொழிலை தீவிரமானவனாக இருக்கவேண்டும் என நினைத்தோம். அதன் காரணமாகவே என்னை டாக்டராகவும் காட்டினார்கள். இதுபோல படத்தில் நான் நடிக்கும் சில காட்சிகளை மாற்றியமைத்தேன்” என அதில் அவர் கூறியிருந்தார்.
தனது புதிய திரைப்படம் குறித்து விஜய் சேதுபதி வெளியிட்ட எக்ஸ் பதிவு:
A tale of survival, rage, and destiny awaits.#SlumDog – 33 Temple Road TEASER OUT NOW ❤️🔥
In cinemas this 2026 💥
A #PuriJagannadh film 🎬@Charmmeofficial Presents 🎥
Produced by Puri Jagannadh, Charmme Kaur, JB NarayanRao KondrollaReleases in… pic.twitter.com/ferVQpMi8I
— VijaySethupathi (@VijaySethuOffl) June 8, 2026
விஜய் சேதுபதியின் கைவசத்தில் கிட்டத்தட்ட 5 படங்களுக்கும் மேல் உள்ளது. தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஸ்லம்டாக், இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் பாக்கெட் நாவல், இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் புதிய படம், அட்லீ தயாரிப்பில் புதிய படம் என கிட்டத்தட்ட 5 படங்களுக்கும் மேல் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். ஆண்டுக்கு 2 படங்கள் என்ற வீதத்தில் நடித்து ஹிட் கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.