Slum Dog Movie: விஜய் சேதுபதியின் ஸ்லம்டாக் படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது? – அப்டேட் இதோ!
Slumdog Movie Teaser Update: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் விஜய் சேதுபதி. இவர் தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள நிலையில், அவரின் நடிப்பில் உருவகியுள்ள படம் ஸ்லம்டாக். இப்படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.
தென்னிந்திய மக்கள் மத்தியில் ஹீரோவாகவும், வில்லனாகவும் பிரபலமானவர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். இயக்குநர் அட்லீயின் (Atlee) இயக்கத்தில் 2023ம் ஆண்டில் வெளியான ஜவான் என்ற படத்தில் மெயின் வில்லனாக நடித்து இந்தியில் அறிமுகமானார். இதையடுத்து தெலுங்கி படங்களில் வில்லனாக நடித்துள்ள நிலையில், தற்போது ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இயக்குநர் பூரி ஜெகன்நாத் (Puri Jagannadh) இயக்கத்தில், விஜய் சேதுபதி தெலுங்கில் நடித்துள்ள புதிய திரைப்படம்தான் ஸ்லம்டாக்: 33 டெம்பிள் ரோட் (SLUMDOG – 33 Temple Road). இப்படத்தில் விஜய் சேதுபதி ஆக்ஷன் நயகனாக நடிக்க, அவருடன் ஜோடியாக மலையாள நடிகை சம்யுக்தா மேனன் (Samyuktha Menon) நடித்துள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் வாத்தி (Vaathi) என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் டீசர் கடந்த 2025ம் ஆண்டு இறுதியிலே வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், கரூர் விவகாரம் தொடர்பாக படத்தின் டீசர் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு பின், டீசர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ஸ்லம்டாக் படத்தின் டீசர் வரும் 2026ம் ஆண்டு ஜூன் 8ம் தேதியில், மாலை 6 மணியளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




இதையும் படிங்க: மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குநரின் புதிய படம்.. வெளியானது ‘பாலன் தி பாய்’ ட்ரெய்லர் வெளியீடு!
நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட ஸ்லம்டாக் பட டீசர் ரிலீஸ் அறிவிப்பு குறித்த பதிவு:
Raw streets. Real scars. Ruthless emotions. 🔥
Unfolding the world of #SLUMDOG – 33 Temple Road with a STRIKING TEASER on JUNE 8th at 6 PM❤️🔥
A #PuriJagannadh film 🎬@Charmmeofficial Presents 🎥
Produced by Puri Jagannadh, Charmme Kaur, #JBNarayanRaoKondrollaReleases in… pic.twitter.com/CjUyvwuhO0
— VijaySethupathi (@VijaySethuOffl) June 5, 2026
இந்த ஸ்லம்டாக் படமானது முழுக்க தெலுங்கு மற்றும் தமிழ் மொழியை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதி, சம்யுக்தா மேனன் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இதில் நடிகை தபு, விஷு ரெட்டி மற்றும் விடிவி கணேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்க, அவரின் மனைவியும், நடிகையுமான சார்மி இப்படத்தை தயாரித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் என்பவரும் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தொடங்கியது நாக சைத்தன்யாவின் சூப்பர் ஹிட் தூதா சீரிஸின் 2-ம் பாகம் ஷூட்டிங்!
இந்த படமானது ஆக்ஷன் மற்றும் அதிரடி கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இப்படம் ஒரு பேமிலி என்டேர்டைமென்ட் திரைப்படமாக உருவாகியுள்ள நிலையில், எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் பணிகளானது முழுமையாக நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. அதன்படி இப்படத்தின் டீசர் 2026 ஜூன் 8ம் தேதியில் வெளியாகின்ற நிலையில், இத்துடன் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்டும் வெளியாகும் என கூறப்படுகிறது.