விஜய் சேதுபதி தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாகும் படம்.. டைட்டில் என்ன தெரியுமா?
Vijay Sethupathi Telugu Debut Movie: நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் தென்னிந்திய மொழிகளில் படங்கள் உருவாகிவருகிறது. அந்த விதத்தில் தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், விஜய் சேதுபதி புது படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே முடிந்த நிலையில், தற்போது இப்படத்தின் முதல் பார்வை மற்றும் டைட்டில் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் அங்கீகரிக்கப்படாத நடிகராக படங்களில் நடித்து, தற்போது தென்னிந்திய சினிமாவிலே சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புது புது படங்கள் வெளியாகி வருகிறது. இவர் சினிமாவில் நாயகனாக மட்டுமில்லாமல், வில்லனாகவும் படங்களில் நடித்து வருகிறார். அந்த விதத்தில் தமிழ் சினிமாவைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். அந்த படத்தை இயக்குநர் பூரி ஜெகன்நாத் (Puri Jagannadh)இயக்கவுள்ளார். இவர் விஜய் தேவரகொண்டாவின் லைகர் (Liger) என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படமானது தற்காலிகமாக “பூரி சேதுபதி” என அழைக்கப்பட்டுவந்த நிலையில், இன்று 2026 ஜனவரி 16ம் தேதியில் இப்படத்தின் முதல் பார்வை மற்றும் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு படக்குழு “ஸ்லம் டாக்” (SLUM DOG ) என்ற பெயரை வைத்துள்ளது. வித்தியாசமாக அமைந்துள்ள இந்த போஸ்டர் தற்போது மக்களிடையே வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க: அங்க நான் தப்பு பண்ணிட்டேன்.. மொத்தம் 84 டேக் – மிஷ்கின் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!
விஜய் சேதுபதி வெளியிட்ட ஸ்லம் டாக் படத்தின் முதல் பரவி குறித்து எக்ஸ் பதிவு :
From the slums…
rises a storm no one can stop.
RAW. RUTHLESS. REAL. ❤️🔥❤️🔥❤️🔥#PuriSethupathi is #SLUMDOG – 33 Temple Road 💥💥💥Happy Birthday Makkalselvan @VijaySethuOffl ❤️#HBDVijaySethupathi
A #PuriJagannadh film 🎬@Charmmeofficial Presents 🎥
Produced by Puri… pic.twitter.com/ca2PCs6tBG— Puri Connects (@PuriConnects) January 16, 2026
விஜய் சேதுபதியின் ஸ்லம் டாக் படத்தின் ரிலீஸ் எப்போது :
இந்த ஸ்லம் டாக் படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இவர் தமிழில் ஏற்கனவே தனுஷின் வாத்தி படத்தில் நடித்து பிரபலமாகியிருந்தார். விஜய் சேதுபதியின் இப்படத்தை இயக்குநர் பூரி ஜெகன்நாத் தான் இயக்கி தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி 2 வேடத்தில் நடிப்பதாக, அதில் ஒரு வேடம் பிச்சைக்காரனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஜெயிலர் 2-வில் கேமியோ வேடத்தில் நடிக்க காரணம் இதுதான் – ஓபனாக சொன்ன விஜய் சேதுபதி!
இப்படத்திற்கு அர்ஜுன் ரெட்டி மற்றும் அனிமல் போன்ற படங்களுக்கு இசையமைத்திருந்த பிரபல இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைத்து வருகிறார். இப்படமானது தெலுங்கு மற்றும் தமிழ் மொழியை மையமாக கொண்டு உருவாகியுள்ள நிலையில், வரும் 2026 பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகளும் வெளியாகும் என தெரிகிறது.