RJ.Balaji: சூர்யாவின் ரசிகர்களே.. அதை தவிர்த்து கருப்பு படத்திலிருந்து இனி எந்த அப்டேட்டும் வராது?- ஆர்.ஜே.பாலாஜி பேச்சு!
RJ.Balaji About Karuppu Movie : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் இருப்பவர் ஆர்.ஜே.பாலாஜி. இவரின் இயக்கத்தில் சூர்யா இணைந்துள்ள 45வது படம்தான் கருப்பு. 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் அப்டேட் குறித்து இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் சிறந்த நாயகனாக இருப்பவர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் மிக பிரம்மாண்டமான படங்கள் உருவாகிவருகிறது. அந்த விதத்தில் தெலுங்கு மற்றும் மலையாள மொழி இயக்குநர்களின் இயக்கத்திலும் புது புது படங்களில் நடித்துவருகிறார். முன்னதாக பிரபல நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி (RJ.Balaji) இயக்கத்தில், சூர்யா மற்றும் திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) இணைந்து நடித்துள்ள படம்தான் கருப்பு (Karuppu). இப்படம் சூர்யா45 என ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், அதனையடுத்து கருப்பு என்ற டைட்டிலை படக்குழு அறிவித்திருந்தது. மேலும் இந்த படத்தில் சூர்யா வழக்கறிஞர் மற்றும் கருப்பு என இரு வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சூர்யாவுடன் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பின் நடிகை திரிஷா மீண்டும் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருகிறது. மேலும் இந்த 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கருப்பு படத்திலிருந்து 2வது சிங்கிள் வெளியாகும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் அப்டேட் குறித்து ஆர்.ஜே.பாலாஜி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பிக்பாஸில் பொங்கலோ பொங்கல்… கொண்டாட்டத்தில் போட்டியாளர்கள்
கருப்பு படம் அப்டேட் குறித்து ஆர்.ஜே. பாலாஜி பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
இந்த பதிவில் பேசிய ஆர்.ஜே. பாலாஜி, “கருப்பு படத்திலிருந்து பொங்கல் வாழ்த்து போஸ்டர், அதனை தொடந்து குடியரசு வாழ்த்து போஸ்டர் வரும் என அனைவரும் எதிர்பார்த்திருப்பீர்கள். ஏற்கனவே பல போஸ்டர்களை வெளியிட்டாச்சி. இனிமேல் வெளியானால் 2வது சிங்கிள் ரிலீஸ் தேதியுடன் வெளியாகும் போஸ்டர்தான் வெளியாகும்.
இதையும் படிங்க: சுவாரஸ்யமும் த்ரில்லரும் நிறைந்த இந்த மாஸ்க் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
கருப்பு படத்தில் பின்னணி வேலைகள் நடைபெற்றுவருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் 2வது பாடல் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என கூறியுள்ளார். மேலும் இதில் பொங்கல் வாழ்த்துக்களையும் கூறி” அந்த வீடியோவை வெளியிட்டிருந்தார்.
கருப்பு படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும் :
சூர்யாவின் இந்த கருப்பு படம் நீதி, நியாயம் மற்றும் தெய்வீகம் என ஒரு கலவையான திரைப்படமாக தயாராகியுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் கடந்த 2025 மே மாதத்திலே நிறைவடைந்த நிலையில், இன்னும் பின்னணி வேலைகள் நடந்து வருகிறது. அந்த வகையில் இப்படம் 2026 ஏப்ரல் மாதத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகுவதற்கு அதிகம் வாய்புள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அப்டேட்டும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



