ட்ரெண்டை ஃபாலோ செய்வோம்… கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு
Suriyas Karuppu Movie Update: தமிழ் சினிமாவில் சூர்யாவின் ரசிகர்கள் தற்போது அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் கருப்பு. இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும் படம் தொடர்பான போஸ்டர்களை தொடர்ந்து படக்குழு வெளியிட்டு வரும் நிலையில் தற்போதும் வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ரெட்ரோ. இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பு மற்றும் லுக் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அது மட்டும் இன்றி இந்தப் பாடலை சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்கள் ரசிகர்கள் ரீ கிரியேட் செய்து நடமாடி வீடியோக்களை வெளியிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 45-வது படத்திற்காக நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்கள் வெளியான நிலையில் கடந்த ஆண்டே படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி படம் கடந்த 2025-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தில் சில முக்கியமான காட்சிகள் படமாக்க வேண்டும் என்றும் படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் முடிவடையாத காரணத்தால் படத்தில் இருந்து முதல் பாடலை மட்டுமே படக்குழு வெளியிட்டு இருந்தது. இந்தப் பாடல் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




ட்ரெண்டை ஃபாலோ செய்வோம்… கருப்பு படக்குழு வெளியிட்ட பதிவு:
இந்த நிலையில் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜன நாயகன் படம் காரணமாக படத்தின் வெளியீடு குறித்து அறிவிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் படத்தில் இருந்து ட்ரெண்டிங்கிற்கு ஏற்ற வகையில் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… தமிழில் மட்டும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?
கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Let’s go with the trend tap the post! #Karuppu💥 pic.twitter.com/NOpDtKW8rS
— Karuppu (@KaruppuMovie) January 12, 2026
Also Read… Parasakthi: கெரியர் பெஸ்ட்.. சிவகார்த்திகேயனின் பராசக்தி பட முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?