விமான பயணிகளுக்கு மகிழச்சி அளிக்கும் வகையில் புதிய விதிமுறைகளை விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இனி விமான டிக்கெட் பதிவு செய்த பிறகு 48 மணி நேரத்திற்குள் எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் டிக்கெட்டை ரத்து செய்யவும் அல்லது மாற்றவும் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகளை இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.