பிக்பாஸில் பொங்கலோ பொங்கல்… கொண்டாட்டத்தில் போட்டியாளர்கள்
Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்க் இன்றுடன் 102 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இன்று பொங்கள் பண்டிகையை மக்கள் அனைவரும் கொண்டாடி வரும் நிலையில் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களும் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் தற்போது ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்று வருகிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 102 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் வைல்கார்ட் போட்டியாளர்களுடன் இணைந்து மொத்தம் 24 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் 20 போட்டியாளர்கள் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது 4 போட்டியாளர்கள் இறுதிப் போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். இதில் யார் வெற்றியாளர் என்பது குறித்த அப்டேட் வருகின்ற வார இறுதியில் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் முன்னதாக வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். தற்போது இருக்கும் இறுதிப் போட்டியார்களைவிட வெளியேறிய போட்டியாளர்கள் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு உள்ளே வந்து தங்களது வன்மத்தை தொடர்ந்து கக்கிவந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து வன்மங்களாக இருந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் மகிழ்ச்சியை ஏற்படுத்த நிகழ்ச்சி குழு பல வேலைகளை செய்து வந்தாலும் அது எதுவும் எடுபடாமலே இருந்தது. தொடர்ந்து இதுவரை இல்லாத அளவில் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ் விமர்சனங்கள் நிறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைவரும் ஒன்றாக பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வீடியோ வெளியாகி உள்ளது.




பிக்பாஸில் பொங்கலோ பொங்கல்… கொண்டாட்டத்தில் போட்டியாளர்கள்:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டியைகை உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் பிக்பாஸில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் புத்தாடை உடுத்தி பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அதன்படி ஃபினாலேவில் உள்ள 4 போட்டியாளர்கள் உடன் வெளியே இருந்துவ் அந்த முன்னாள் போட்டியாளர்களும் இந்த பண்டிகையை கொண்டாடும் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… மீண்டும் பிக்பாஸில் நுழைந்த சாண்ட்ரா… வந்ததுமே தொடங்கிய சர்ச்சை… வைரலாகும் வீடியோ
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day102 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/8RmrOCFdsK
— Vijay Television (@vijaytelevision) January 15, 2026
Also Read… படையப்பாவில் அந்த கதாபாத்திரத்தில்தான் நான் நடிப்பேன் என மீனா ஒரே அடம் – ரஜினிகாந்த் சொன்ன உண்மை!