Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிக்பாஸில் சாண்ட்ரா செய்த செயல்… வெளிப்படையாக பிரஜினடம் பேசிய திவ்யா

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் வைல்கார்ட் போட்டியாளர்களாக 4 பேர் உள்ளே வந்தனர். இதில் கணவன் மனைவியாக பிரஜின் மற்றும் சாண்ட்ரா இருவரும் வந்த நிலையில் அவர்களுடன் திவ்யாவும் நெருக்கமாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸில் சாண்ட்ரா செய்த செயல்… வெளிப்படையாக பிரஜினடம் பேசிய திவ்யா
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Jan 2026 17:02 PM IST

விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 24 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் 20 போட்டியாளர்கள் நிகழ்ச்சி தொடங்கும் போதே உள்ளே அனுப்பப்பட்ட நிலையில் 4 பேர் வைல்கார்ட் போட்டியாளர்களாக நுழைந்தனர். முன்னதாக ஒளிபரப்பான 8 சீசன்களில் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் தொடர்ந்து பல மாற்றங்கள் நடைப்பெற்று இருந்தது. மேலும் இந்த சீசனில் வைல்ட்கார்ட் போட்டியாளராக வந்த 4 பேரில் சாண்ட்ரா மற்றும் பிரஜின் இருவரும் நிஜ ஜோடி ஆவர். இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்த நிலையில் ஜோடியாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதுவரை தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது இல்லை என்றே கூறலாம். இது மக்களுக்கு மிகவும் வித்யாசமான அனுபவத்தை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருந்த சூழலில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் ஜோடியாக வந்த இவர்களுடன் மற்றொரு வைல்கார்ட் போட்டியாளராக வந்த திவ்யாவும் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார். இந்த நிலையில் இவர்களின் நட்பு ஒரு கட்டத்தில் விரிசல் ஏற்பட்டு பிரிந்துவிடும் அளவிற்கு மாறியது. அதற்கு காரணம் திவ்யா மீது சாண்ட்ரா தவறான எண்ணத்தை வைத்ததுதான் காரணம் என்பது ஆகும்.

சாண்ட்ரா குறித்து பிரஜினிடம் வெளிப்படையாக பேசிய திவ்யா:

இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் நேற்று நடைப்பெற்ற நிகழ்ச்சியில் சாண்ட்ரா வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து இன்று செலிபிரேஷன் வாரத்திற்காக பிரஜின் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். அவர் திவ்யாவை தனியாக அழைத்து பேசுகிறார். அப்போது சாண்ட்ரா தன்னை குறித்து எப்படி எல்லாம் யோசித்துள்ளார் என்பதை குறித்து திவ்யா வெளிப்படையாக பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… அபுதாபி கார் ரேஸ் களத்தில் சந்தித்த அஜித் குமார்- அனிருத்.. ரசிகர்களிடையே வைரலாகும் போட்டோஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சூர்யா 47 படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் சர்ப்ரைஸ்… என்னனு தெரியுமா?