அபுதாபி கார் ரேஸ் களத்தில் சந்தித்த அஜித் குமார்- அனிருத்.. ரசிகர்களிடையே வைரலாகும் போட்டோஸ்!
Anirudh Met Ajith Kumar: சினிமாவில் லீட் நாயகனாக இருந்துவருபவர்தான் அஜித் குமார். இவர் தற்போது கார் ரேஸ் பயிற்சியில் பிசியாக இருந்துவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் துபாய், அபுதாபியில் உள்ள கார் ரேஸ் களத்தில் நடிகர் அஜித் குமார் மற்றும் அனிருத் ரவிச்சந்தர் இருவரும் சந்தித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) தமிழ் சினிமாவில் மிகப்பெரும் நடிகர்களில் ஒருவராக இருந்த்துவருகிறார். இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 63 திரைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில், ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான குட் பேட் அக்லி (Good Bad Ugly) படத்தின் ஷூட்டிங்கை முடித்த கையேடு கார் ரேஸ் (Car Race) போட்டியில் அஜித் குமார் இணைந்துவிட்டார். இவர் கிட்டத்தட்ட 1 ஆண்டுக்கும் மேலாக இந்த கார் ரேஸ் பயிற்சியில் தீவிரம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் சார்பாக தனது கார் ரேஸ் அணியுடன் பல்வேறு நாடுகளில் நடைபெறும் 24H கார் ரேஸ் நிகழ்ச்சியிலும் பங்குபெற்றுவருகிறார்.
இந்நிலையில் தற்போது நடிகர் அஜித் குமார் துபாய் அபுதாபியில் (Dubai Abu Dhabi) தனது அணியினருடன் கார் ரேஸ் பயிற்சியில் உள்ளார். இந்நிலையில் இவரை தமிழ் பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichandar) நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவிவருகிறது.




இதையும் படிங்க: நான் நடிகராக கட்டாயப்படுத்தப்பட்டேன்… நடிகர் ரவி மோகன்
சுரேஷ் சந்திரா வெளியிட்ட அஜித் குமார் மற்றும் அனிருத் சந்திப்பு தொடர்பான பதிவு:
The Gulf witnesses the bonding 🤝✨
Ani meets AK in Abu Dhabi 🇦🇪@Akracingoffl @anirudhofficial @SureshChandraa @DoneChannel1 #AjithKumarRacing #AniMeetsAK #AjithKumar #AnirudhRavichander pic.twitter.com/M4E6IIUdKJ— Suresh Chandra (@SureshChandraa) January 10, 2026
அஜித் குமாரின் புது திரைப்படம் :
குட் பேட் அக்லி படத்தின் வெற்றியை அடுத்ததாக நடிகர் அஜித் குமார் மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்தான் புது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படமானது தற்காலிகமாக AK64 அழைக்கப்பட்டுவருகிறது. இந்த படத்தில் நடிகர் அஜித் குமார் 2 வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படமானது மாஸ் காட்சிகளுடன் இல்லாமல் ஒரு குடும்ப திரைப்படமாக உருவாக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025 நவம்பர் மாதத்திலே துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: துல்கர் சல்மான் தமிழ் சினிமாவில் நோ சொன்ன படங்களின் நிலை இதுதானா?
பின் தொடர்ந்து அடுத்தடுத்த கார் ரேஸில் அஜித் குமார் பிசியாக இருந்துவரும் நிலையில், வரும் 2026 பிப்ரவரி மாதத்தின் இறுதியில் துவங்கும் என இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்திருந்தார். இதில் அஜித் குறுக்கு ஜோடியாக இளம் நடிகை ஸ்ரீலீலா நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், ஆதிக் மற்றும் ஸ்ரீலீலா இருவரும் சமீபத்தில் அஜித் குமாரை மலேசியாவில் நேரில் சந்தித்திருந்தார். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைப்பதாக கூறப்படுகிறது. அந்த விதத்தில் சமீபத்தில் அஜித் குமாரை அனிருத் நேரில் சந்தித்து பேசியிருந்த நிலையில், இது உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.