Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ajith Kumar: மீண்டும் ஒரு வெற்றி.. மலேசியாவில் நடைபெற்ற கார் ரேஸில் 4வது இடத்தை பிடித்த அஜித் அணி!

Ajith Kumar Malaysia Car Race: கோலிவுட் சினிமாவில் நட்சத்திர நாயகனாக இருப்பவர் அஜித் குமார். இவர் தற்போது இந்தியாவின் சார்பாக பல்வேறு நாடுகளில் நடக்கும் 24H கார் ரேஸ் போட்டிகளில் பங்குபெற்றுவருகிறார். இந்நிலையில் மலேசியாவில் நேற்று 2025 டிசம்பர் 6ம் தேதியில் நடைபெற்ற 24H ஹ்ரிவென்டிக் தொடரில் அஜித் அணி 4வது இடத்தை வென்றுள்ளது.

Ajith Kumar: மீண்டும் ஒரு வெற்றி.. மலேசியாவில் நடைபெற்ற கார் ரேஸில் 4வது இடத்தை பிடித்த அஜித் அணி!
அஜித் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 07 Dec 2025 17:21 PM IST

நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) தற்போது சினிமாவில் நடிப்பத்தை தொடந்து, தனது பேஷனான கார் ரேஸ் (Car Race) போட்டிகளில் ஆர்வம் கட்டிவருகிறார். தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நடிகர் அரசியல் சென்ற நிலையில், மற்றொரு உச்ச நடிகர் கார் ரேஸ் பக்கம் சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவர் கடந்த 2024ம் ஆண்டு இறுதி முதல் பல்வேறு நாடுகளில் நடைபெற்றுவரும் 24H கார் ரேஸ் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக தனது அணியினருடன் கலந்துகொண்டு வருகிறார். அந்த வகையில் இதுவரை பங்குபெற்ற 3 போட்டிகளில் வென்ற நிலையில், நான்காவதாக மலேசியாவில் (Malaysia) நடைபெற்ற 24H ஹ்ரிவென்டிக் தொடரில் (24H Hrivendik Series) தனது அணியினருடன் அஜித் கலந்துகொண்டார். இந்த போட்டியானது மிகவும் தீவிரமாக நடைபெற்றுவந்த நிலையில், இந்த போட்டியை அஜித்தின் மலேசிய ரசிகர்களும் நேரில் சென்று பார்த்திருந்தார்.

இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியிருந்தது. அந்த வகையில் நேற்று 2025 டிசம்பர் 7ம் தேதியில் மலேசியாவில் நடைபெற்ற 24H ஹ்ரிவென்டிக் தொடரில் அஜித் குமாரின் அணி 4வது இடத்தை வென்றுள்ளதாம். இது தொடர்பான தகவல் தற்போது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றியானது இந்த 2025ம் ஆண்டில் அஜித் குமாரின் 4வது வெற்றியாகும்.

இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜ் உடனான கூட்டணி குறித்து பேசிய அமீர் கான்

அஜித் குமார் மலேசிய கார் ரேஸ் தொடர்பாக வைரலாகும் பதிவு :

மேலும் நேற்று நடந்த கார் ரேஸ் போட்டியில் நடிகர் அஜித் தீவிரமாக கார் ஒட்டி ரசிகர்களிடையே வரவேற்கப்பட்டிருந்தார். இதை தொடர்ந்து மலேசியாவுக்கு நகைக்கடை திறப்பு விழா தொடர்பான நிகழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் கலந்துகொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தனக்கு பிடித்த நடிகர் அஜித் குமாரை நேரில் சந்திரிருந்தார். கார் ரேஸ் நடக்கும் இடத்தில், அஜித் குமார் அணியின் ஜெர்சியை அணிந்தபடி சிலம்பரசன் போட்டியில் பார்வையாளராக கலந்துகொண்டிருந்தார்.

இதையும் படிங்க: அஜித் குமாரை ரேஸ் களத்தில் நேரில் சந்தித்த சிலம்பரசன்.. இரு கோலிவுட் ஸ்டாரின் வீடியோ தற்போது தீயாக பரவல்!

இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகிவந்திருந்தது. தொடர்ந்து சிலாங்கூர் பட்டத்து இளவரசர் தெங்கு அமீர் ஷா, அஜித் குமாரை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார். இது தொடர்பான வீடியோவும் ரசிகர்களிடையே தற்போது வைரலாகிவருகிறது. இந்திய அரசியல்வாதிகள் மூத்த பிரபலங்கள் வரை அஜித் குமாரை புகழ்ந்துவரும் நிலையில், மேலும் மலேசிய இளவரசரும் அஜித்தை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ள விஷயம் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டுவருகிற்து.