தளபதி ரசிகர்களே ஒரு ஹேப்பி நியூஸ்.. விஜய்யின் ஜன நாயகன் பட நிகழ்ச்சியில் தனுஷ்!
Jana Nayagan Audio Launch : நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக மிக பிரம்மாண்டமாக தயாராகிவருவதுதான் ஜன நாயகம். இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்க, கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துவருகிறது. இந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.
கோலிவுட் சினிமாவில் வசூல் நாயகனாக இருந்துவருபவர் தளபதி விஜய் (Thalapathy Vijay). தமிழ் மொழியில் இவரின் படத்திற்குதான் அதிக வரவேற்பு இருந்துவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் கடைசி திரைப்படமாக உருவாகியுள்ளதுதான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துள்ளார். இவர்கள் இருவரும் இப்படத்திற்கு முன் பீஸ்ட் (Beast) திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஜன நாயகன் படத்தை இயக்குநர் ஹெச். வினோத் (H. Vinoth) இயக்க, கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனமானது பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander) இசையமைத்துள்ள நிலையில், கடந்த 2025 நவம்பர் தொடக்கத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் தற்போது இப்பட இசைவெளியீட்டு விழா குறித்து இணையத்தில் தகவல் ஒன்று கசிந்துள்ளது. ஜன நாயகன் திரைப்படத்தின் தளபதி திருவிழா நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் (Dhanush) சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறாராம். இந்த தகவலானது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை.




இதையும் படிங்க: ஜாலி டூ மீட் யூ… காமெடி, ஆக்ஷன், ரொமாண்டிக் பாணியில் வெளியானது வா வாத்தியார் பட ட்ரெய்லர்
ஜன நாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :
A live tribute concert celebrating the man, the music & the memories we grew up with ❤️
📍Bukit Jalil Stadium, Kuala Lumpur, Malaysia
See you on Dec 27, 2025 ❤️@malikstreams
Travel Partner @gtholidays_ pic.twitter.com/tkSrkLtoRH
— KVN Productions (@KvnProductions) November 23, 2025
இந்த இசை வெளியீட்டு விழா வரும் 2025ம் டிசம்பர் 27ம் தேதியில் மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றவுள்ளது. இந்த் நிகழ்ச்சியானது தளபதி திருவிழா என்ற டைட்டிலில் நடைபெறுகிறது. இந்த ஜன நாயகன் படம் தளபதி விஜய்யின் கடைசி படம் என்ற காரணத்தால் இந்த நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் தளபதி விஜய்யின் படங்களில் இருந்து 32 பாடல்கள் பாடப்படவுள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியில் தளபதி பாய்ஸ் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார் மற்றும் அட்லீ போன்ற பிரபலங்களும் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பெரிய பட்ஜெட்டில் தயாராகும் நடிகர் விஜய் சேதுபதியின் படம்? வைரலாகும் தகவல்
இந்நிலையில் நடிகர் தனுஷும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறாராம். ஏனென்றால் இயக்குநர் ஹெச். வினோத் தனது அடுத்த திரைப்படத்தை தனுஷை வைத்து இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவும், தளபதி விஜயின் கடைசி படம் என்ற விதத்திலும் தனுஷ் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இன்னும் இந்நிகழ்ச்சிக்கு சில நாட்களே உள்ள நிலையில், இது தொடர்பான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துவருகிறது.