க்விக் காமர்ஸ் நிறுவனமான Blinkit நிறுவனத்தின் டெலிவரி பணியாளர் ஒருவர், இரவு நேர டெலிவரி தொடர்பான வாக்குவாதத்துக்குப் பிறகு வாடிக்கையாளரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பால் ஜே. விதயத்தில் என்ற நபர் அளித்த புகாரின் படி, மார்ச் 7 அதிகாலை சுமார் 2 மணியளவில் அவர் Blinkit செயலி மூலம் பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் டெலிவரி பணியாளர் தவறான இடத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது. சரியான முகவரிக்கு வருமாறு வாடிக்கையாளர் கூறியபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்.