Tere Ishq Mein: ரூ100 கோடி கிளப்பில் இணைந்த தனுஷின் தேரே இஷ்க் மே.. உலகளாவிய வசூல் எவ்வளவு தெரியுமா?
Tere Ishq Mein 7 Days Collection: பான் இந்திய அளவிற்கு கடந்த 2025 ஆண்டு நவம்பர் 28ம் தேதியில் வெளியான திரைப்படம்தான் தேரே இஷ்க் மே. தனுஷ் மற்றும் கிரித்தி சனோனின் கூட்டணியில் வெளியான இப்படம் கிட்டத்தட்ட 7 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில் உலகமெங்கும் மொத்தம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நடிகர் தனுஷின் (Dhanush) நடிப்பில் தமிழ் சினிமாவை கடந்து இந்தி, தெலுங்கு மற்றும் ஹாலிவுட் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் மட்டும் 2025ம் ஆண்டில் மொத்தமாக 3 பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது. அதில் கடந்த 2025 நவம்பர் 28ம் தேதியில் வெளியான படம்தான் தேரே இஷ்க் மே (Tere Ishq Mein). இந்த திரைப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் (Kriti Sanon) நாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தை இயக்குநர் ஆனந்த் எல் ராய் (Anand L Rai) இயக்க, கலர் எல்லோ மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் (AR. Rahman) இசையமைப்பில் அதிரடி காதல் கதைக்களத்தில் இந்த படமானது வெளியாகியிருந்தது. இந்த படமானது இந்த காலத்தில் இருக்கும் பெண்களின் காதல் குறித்த கதையில் வெளியாகியிருந்தது.
மிகவும் வித்தியாசமான கதையில் வெளியான இப்படம் 1 வாரத்தில் உலகளவில் மொத்தம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 7 நாட்களில் இப்படமானது மொத்தமாக சுமார் ரூ 118.76 கோடிகளை வசூல் செய்துள்ளது. தற்போது இந்த தகவலானது ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: என்னப்பா ஆரம்பிக்கலாமா? மலேசியாவில் கார் ரேஸிற்கு தயாராகிவரும் அஜித் குமார்.. வைரலாகும் வீடியோ!
தனுஷின் தேரே இஷ்க் மே படத்தின் 7 நாட்கள் வசூல் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
A global ISHK phenomenon!❤️🔥#TereIshkMein now in cinemas worldwide, in Hindi, Tamil and Telugu.
Book your tickets now: https://t.co/iptEQCiKS0@dhanushkraja @kritisanon @arrahman @aanandlrai #BhushanKumar #HimanshuSharma #KrishanKumar @Irshad_kamil @neerajyadav911 @ShivChanana… pic.twitter.com/LIziJ15HmB
— Colour Yellow Movies (@colouryellow_in) December 5, 2025
தனுஷின் புதிய திரைப்படங்கள் :
இந்த 2025ம் ஆண்டில் மட்டும் தனுஷின் நடிப்பில் கிட்டத்தட்ட 3 படங்கள் வெளியாகியிருந்தது. அதில் 2 படங்கள் சுமார் ரூ 100 கோடிகளை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரின் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் வெளியான தமிழ் படமான இட்லி கடை பெருமளவு வரவேற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்களை தொடர்ந்து தனுஷ் அடுத்தடுத்த தமிழ் படங்களில் கமிட்டாகியுள்ளார். இவரின் நடிப்பில் டி54 என்ற படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா இயங்கிவந்த நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது.
இதையும் படிங்க: தலைவர் 173 படத்திற்கு அனிருத் இசையமைக்கவில்லையா? இவர்தான் இசையமைக்கிறாரா?
இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக இளம் நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை அடுத்ததாக அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் டி55 என்ற படத்திலும், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் டி56 என்ற படத்திலும் தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இளையராஜா பயோபிக் மற்றும் அப்துல்கலாம் பயோபிக் போன்ற படங்களிலும் தனுஷ் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.