சூர்யா 46 படத்தின் டைட்டில் ரிலீஸ் எப்போது தெரியுமா? இணையத்தில் கசிந்த தகவல்
Suriya 46 Movie Update: நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது ரசிகர்கள் அதிக அளவில் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் சூர்யா 46 படம். இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படத்தின் டைட்டில் எப்போது வெளியாகும் என்பது குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் வெங்கி அட்லூரி. இவர் தமிழ் சினிமாவில் வாத்தி என்ற படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தார். நடிகர் தனுஷ் நாயகனாக நடித்த இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் இசையமைத்ததற்காக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து பான் இந்திய அளவில் இயக்குநர் வெங்கி அட்லூரியை பிரபலமாக்கிய படம் லக்கி பாஸ்கர். நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்த இந்தப் படம் கடந்த 2024-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி எந்த நடிகரை இயக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் இவர் நடிகர் சூர்யவை இயக்க உள்ளார் என்ற செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 46 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் தொடங்கிய நிலையில் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.




சூர்யா 46 படத்தின் டைட்டில் ரிலீஸ் எப்போது?
இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா டன்டன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்த நிலையில் படம் அடுத்த 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வருகின்ற டிசம்பர் மாதம் 25-ம் தேதி கிருஸ்துமஸ் பண்டிகை அல்லது நியூ இயரை முன்னிட்டு படத்தின் டைட்டில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… மூன்வாக் படத்திற்காக ஸ்பெஷலாக ஏ.ஆர்.ரஹ்மான் செய்த விசயம் – வைரலாகும் வீடியோ
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
There is a high chance that the TITLE announcement of #Suriya46 will be released either on Christmas 🎄 or New Year 🎉.
This Month Update — #Karuppu – #Suriya 46 — #Suriya47 loading
Sambavam Iruku…..💥 pic.twitter.com/DxIcLiClnO
— Movie Tamil (@_MovieTamil) December 4, 2025
Also Read… மீண்டும் இணையும் விஜய் சேதுபதி – அருண்குமார் கூட்டணி… இணையத்தில் கசிந்த தகவல்