Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

LIK: இன்னும் 18 நாள்தான் இருக்கு.. ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு!

Love Insurance Kompany Special Poster: தென்னிந்திய சினிமாவில் தற்போது பிரபல நடிகர்களில் ஒருவராக வளர்ந்துவருபவர்தான் பிரதீப் ரங்கநாதன். இவரின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாகி காத்திருக்கும் படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படக்குழு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

LIK: இன்னும் 18 நாள்தான் இருக்கு.. ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு!
லவ் இன்சூரன்ஸ் கம்பெனிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 01 Dec 2025 20:46 PM IST

நடிகர் பிரதீப் ரங்கநாதனின் (Pradeep Ranganathan) நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் டியூட் (Dude). கடந்த 2025ம் அக்டோபர் 17ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு இப்படமானது வெளியாகியிருந்த நிலையில், மக்களிடையே சூப்பர் டூப்பர் ஹிட்டாகியிருந்தது. இந்த படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ (Mamitha baiju) இணைந்து நடித்திருந்தனர். மேலும் இதை அறிமுக இயக்குநரான கீர்த்திஸ்வரன் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு முன்னே வெளியீட்டிற்கு தயாராகிவந்த படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (love Insurance Kompany). இந்த திரைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் (Vignesh ShivaN) இயக்க, நயன்தாராவின் (Nayanthara) ரௌடி பிக்ச்சர்ஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தி ல் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக க்ரித்தி ஷெட்டி (Krithi Shetty) நடித்துள்ளார். இவருக்கு தமிழில் இதுதான் முதல் அறிமுக படமாக வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் (Anirudh) இசையமைத்துள்ள நிலையில், 2 பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படமானது வரும் 2025 டிசம்பர் 18ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகும் நிலையில், இது குறித்து படக்குழு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: சமந்தா – ராஜ் நிதிமோருவின் திருமணம்.. ஷாக்கிங் பதிவை வெளியிட்ட ராஜின் முன்னாள் மனைவி!

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர் பதிவு :

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ட்ரெய்லர் எப்போது ரிலீஸ் :

நடிகர் பிரதீப் ரங்கநாதன் மற்றும் க்ரித்தி ஷெட்டியின் காமினேஷனில் உருவாகியுள்ள இப்படம், எதிர்கால காதல் தொடர்பான கதையில் தயாராகியுள்ளதாம். இதில் நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, யோகி பாபு, கௌரி ஜி கிஷன், சீமான் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது சுமாரா ரூ 80 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ளதாம். இந்த படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட 80 சதவீதம் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆண்கள் VS பெண்கள்.. குறைகளை கொட்டித்தீர்த்த போட்டியாளர்கள்… விறுவிறுப்பான டுடே புரோமோ!

இந்த படத்தை அதிக டெக்னலாஜியை பயன்படுத்தி இயக்குநர் விக்னேஷ் சிவன் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் வரும் 2025ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்தின் ட்ரெய்லர் வரும் 2025 டிசம்பர் 14ம் தேதி அல்லது அதன் பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பும் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.