Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மோகன் ஜி படம்னு தெரிஞ்சு இருந்தா பாடல் பாடி இருக்க மாட்டேன் – சின்மயி விளக்கம்

Singer Chinmayi: பான் இந்திய அளவில் பிரபல பாடகியாக வலம் வருபவர் பாடகி சின்மயி ஸ்ரீபாதா. இவர் சமீபத்தில் திரௌபதி 2-ம் பாகத்திற்காக ஒரு பாடலைப் பாடியுள்ளார். அந்தப் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலான நிலையில் அதுகுறித்து சின்மயி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு வைரலாகி வருகின்றது.

மோகன் ஜி படம்னு தெரிஞ்சு இருந்தா பாடல் பாடி இருக்க மாட்டேன் – சின்மயி விளக்கம்
சின்மயிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Dec 2025 16:16 PM IST

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் பல ஹிட் படங்களுக்கு பாடல்களைப் பாடியுள்ளார் பாடகி சின்மயி ஸ்ரீபாதா. இவரது இசையில் வெளியாகும் பாடல்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து படங்களில் பிசியாக பாடிவந்த பாடகி சின்மயி ஸ்ரீபாதா மீ டூ விவகாரத்தில் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்தபோது திரையுலகில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இவரதது குற்றச்சாட்டிற்கு பிறகு சினிமா துறையில் பல பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியான வன்கொடுமைகள் குறித்து வெளிப்படையாக பேசத் தொடங்கினர். இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு சின்மயி பெரிய அளவில் சினிமாவில் பாடல்கள் பாடாமல் இருந்தார். மேலும் டப்பிங் யூனியனிலும் சில பிரச்னைகள் காரணமாக அவருக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தக் லைஃப் படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான முத்தமலை பாடலை இசை வெளியீட்டு விழாவில் சின்மயி ஸ்ரீபாதா பாடினார். படத்தில் இந்தப் பாடலை பாடகி தீ பாடியிருந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவில் அவர் வராத காரணத்தால் சின்மயி ஸ்ரீபாதா இந்தப் பாடலைப் பாடியது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடலைத் தொடர்ந்து சின்மயிக்கு தொடர்ந்து பாடகள் பாட வாய்ப்புகள் கிடைத்தது. இந்த நிலையில் சமீபத்தில் திரௌபதி 2 படத்தில் அவர் பாடிய பாடல் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளது வைரலாகி வருகின்றது.

மோகன் ஜி படம்னு தெரிஞ்சு இருந்தா பாடல் பாடி இருக்க மாட்டேன்:

அந்தப் பதிவில் சின்மயி கூறியதாவது, ஆரம்பத்தில், எம்கோனிக்காக எனது மனமார்ந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஜிப்ரான், நான் ஜிங்கிள் பாடும் நாட்களில் இருந்து 18 வருடங்களாக எனக்குத் தெரிந்த ஒரு இசையமைப்பாளர். அவரது அலுவலகம் இந்தப் பாடலைப் பாட அழைத்தபோது, ​​நான் வழக்கம்போலச் சென்று பாடினேன். எனக்கு சரியாக நினைவிருந்தால், இந்த அமர்வின் போது ஜிப்ரான் இல்லை – பாடலுக்கு எப்படி ஸ்வரமாக ஒலிப்பது என்பது குறித்து எனக்கு ஒரு யோசனை வழங்கப்பட்டது; நான் பதிவை முடித்துவிட்டு வெளியேறினேன்.

இப்போதுதான் சூழலைப் பற்றி நான் கற்றுக்கொள்ள வேண்டும். எனக்கு முன்பே தெரிந்திருந்தால் நான் ஒருபோதும் ஒத்துழைத்திருக்க மாட்டேன், ஏனென்றால் சித்தாந்தங்கள் என்னுடையவற்றுக்கு முற்றிலும் முரணாக உள்ளன. இது முழுமையான உண்மை என்று அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார்.

Also Read… ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணையும் பிரபல நடிகர்கள்? வைரலாகும் தகவல்

சின்மயி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது ராஷ்மிகாவின் தி கேர்ள்ஃபிரண்ட் படக்குழு… எப்போது ரிலீஸ் தெரியுமா