ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணையும் பிரபல நடிகர்கள்? வைரலாகும் தகவல்
Jailer 2 Movie Update: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் அடுத்ததாக கோவாவில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
கோலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இவர் சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததை சினிமா வட்டாரத்தில் இருக்கும் பிரபலங்களும், ரசிகர்களும் தற்போது கொண்டாடி வருகின்றனர். மேலும் சமீபத்தில் கோவாவில் நடைப்பெற்ற 56-வது திரைப்பட திருவிழா நடைப்பெற்ற போது அங்கு ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற நடிகர் ரஜினிகாந்திற்கு திரைத்துறையில் உள்ளவர்களும் ரசிகர்களும் தொடர்ந்து வாழ்த்தி வருகின்றனர். சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்த நடிகர் ரஜினிகாந்திற்கு தற்போது 74 வயது முடிவடைந்து 75-வது வயதை எட்ட உள்ளார். இத்தனை வயதைக் கடந்தும் தனது நடிப்பு வாழ்க்கைக்கு ப்ரேக் எடுக்காமல் தொடர்ந்து நாயகனாக நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். மேலும் வருடத்திற்கு ஒரு படமாவது ரஜினிகாந்த் நடிப்பில் திரையரங்குகளில் தொடர்ந்து வெளியாகி வருகின்றது.
அந்த வகையில் இந்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் கூலி. இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த நிலையில் பான் இந்திய பிரபலங்கள் பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் அவரது 172-வது படமான ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் அடுத்தடுத்த அப்டேட்கள் இணையத்தில் கசிந்து வருகின்றது.




ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணையும் பிரபல நடிகர்கள்?
இந்த நிலையில் இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பணிகள் கோவாவில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படப்பிடிப்பு பணிகளில் பிரபல நடிகர்கள் விஜய் சேதுபதி, மோகன்லால் மற்றும் ஜாக்கி ஷெராஃப் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. முன்னதாக எஸ்.ஜே.சூர்யாவின் காட்சிகள் கோவாவில் படமாக்கப்பட்ட நிலையில் தற்போது பாலையாவிற்கு பதிலாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… ஏ.ஆர்.ரகுமானை அடிக்க வேண்டும் என்ற அளவிற்கு அவர் மீது கோபம் வந்தது – ராம் கோபால் வர்மா
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#Jailer2 – Next Schedule to happen in Goa..⭐ Superstar #Rajinikanth, #VijaySethupathi , #Mohanlal & #JackieShroff are said to be part of the schedule.. 🔥
Already #SjSuryah portions were filmed in Goa..🤝 VJS to replace Balayya in the film..🤙 Massive Starcast from #Nelson..🤝…
— Laxmi Kanth (@iammoviebuff007) November 30, 2025
Also Read… விஜய் சேதுபதி குறித்து புகழ்ந்து பேசிய நெல்சன் திலீப் குமார் – வைரலாகும் வீடியோ