Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஏ.ஆர்.ரகுமானை அடிக்க வேண்டும் என்ற அளவிற்கு அவர் மீது கோபம் வந்தது – ராம் கோபால் வர்மா

Director Ram Gopal Varma: சர்ச்சைகளின் நாயகனாக சமூக வலைதளத்தில் வலம் வருபவர் பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா. தொடர்ந்து இவர் பேசும் கருத்துகள் சர்ச்சைகளை கிளப்பி வரும் நிலையில் சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் குறித்து சொன்ன கருத்து இணையத்தில் தற்போது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.ரகுமானை அடிக்க வேண்டும் என்ற அளவிற்கு அவர் மீது கோபம் வந்தது – ராம் கோபால் வர்மா
ராம் கோபால் வர்மா மற்றும் ஏ.ஆர்.ரகுமான்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 27 Nov 2025 13:05 PM IST

தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. இவர் தெலுங்கு சினிமாவில் கடந்த 1989-ம் ஆண்டு வெளியான சிவா என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களை வைத்து பல ஹிட் படங்களை இயக்கி உள்ளார் இயக்குநர் ராம் கோபால் வர்மா. தெலுங்கு சினிமாவில் மட்டும் இன்றி ஹிந்தி சினிமாவிலும் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தி என ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களிடையே பிரபலமான இயக்குநராக வலம் வரும் ராம் கோபால் வர்மா இறுதியாக 2024-ம் ஆண்டு வியூகம் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து தற்போது இயக்குநர் ராம் கோபால் வர்மா இந்தி சினிமாவில் போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் வருகின்ற 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சினிமாவில் இவர் இயக்கும் படங்களால் பிரபலம் ஆனதைவிட இவர் பேசும் சர்ச்சைக்குறிய கருத்துகளால் தான் அதிக அளவில் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகிறார். தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வரும் இயக்குநர் ராம் கோபால் வர்மா இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் குறித்து பேசியது வைரலாகி வருகின்றது.

Also Read… பிசாசு 2 படத்தின் நிர்வாண காட்சி குறித்து ஓபனாக பேசிய ஆண்ட்ரியா – வைரலாகும் வீடியோ

ஏ.ஆர்.ரகுமானை அடிக்க வேண்டும் என்ற அளவிற்கு கோபம் வந்தது:

இந்த நிலையில் கடந்த 1995-ம் ஆண்டு இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இந்தி சினிமாவில் வெளியான ரங்கீலா படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். இந்தப் படத்திற்கு பணியாற்றும் போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஒரு வாரமாக கோவாவில் ஹோட்டல் அறையில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டு இருந்தார். அப்போது எனக்கு அவரை அடிக்கும் அளவிற்கு கோபம் வந்தது. ஆனால், அவர் இறுதியாக அந்த ‘ஹே ராமா’ பாடலைக் கொண்டு வந்தபோது, ​​பெரிய விஷயங்களுக்கு காத்திருக்க பொறுமை தேவை என்று நான் நினைத்தேன். இறுதியில் அவர் மதிப்புக்குரியவர் என்பதை அவர் நிரூபித்தார் என்று இயக்குநர் ராம் கோபால் வர்மா சமீபத்தில் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகின்றது,

Also Read… நாளை வெளியாகிறது கார்த்தியின் வா வாத்தியார் படத்தின் முதல் சிங்கிள்