Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நாளை வெளியாகிறது கார்த்தியின் வா வாத்தியார் படத்தின் முதல் சிங்கிள்

Vaa Vaathiyar Movie First Single Update: நடிகர் கார்த்தி நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் வா வாத்தியார். இந்த நிலையில் வா வாத்தியார் படத்தில் இருந்து நாளை முதல் சிங்கிள் வீடியோ வெளியாக உள்ளதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

நாளை வெளியாகிறது கார்த்தியின் வா வாத்தியார் படத்தின் முதல் சிங்கிள்
வா வாத்தியார்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Nov 2025 19:49 PM IST

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர் சிவக்குமாரின் இளைய மகன் மற்றும் பிரபல நடிகர் சூர்யாவின் தம்பியாக சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகினார் நடிகர் கார்த்தி. இவர் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆவதற்கு முன்னதாக இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. பின்பு தமிழ் சினிமாவில் இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். கிராமத்து இளைஞர், சிட்டி இளைஞர், சாக்லேட் பாய் மற்றும் ஆக்‌ஷன் நாயகன் என எந்தவித கதாப்பாத்திரமாக இருந்தாலும் நடிகர் கார்த்தி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடித்து வந்த நடிகர் கார்த்தி தற்போது தென்னிந்திய சினிமாவில் மற்ற மொழிகளிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார். இதன் காரணமாக மற்ற மொழிகளிலும் கார்த்திக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் கார்த்தி நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான மெய்யழகன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் அடுத்தடுத்து வா வாத்தியார், சர்தார் 2 மற்றும் மார்ஷல் ஆகியப் படங்களில் நடித்து வருகிறார்.

நாளை வெளியாகிறது வா வாத்தியார் படத்தின் முதல் சிங்கிள்:

இந்த நிலையில் நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படம் வா வாத்தியார். இந்தப் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிகை கிருத்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து பல முன்னணி நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் படம் வருகின்ற 5-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து முதல் சிங்கிளான ஆலாபிக்கி உம்மக் என்ற பாடல் நாளை 27-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read… பிக்பாஸில் வியானாவால் கடுப்பான அமித்… அழுகும் வியானா – வைரலாகும் வீடியோ

வா வாத்தியார் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… 2026-ம் ஆண்டில் வரிசைக்கட்டும் சூர்யாவின் படங்கள் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்