பிக்பாஸில் வியானாவால் கடுப்பான அமித்… அழுகும் வியானா – வைரலாகும் வீடியோ
Bigg Boss Tamil Season 9 : பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 8-வது வாரம் சென்று கொண்டிருக்கின்றது. இந்த வாரம் பிக்பாஸ் வீடு பிக்பாஸ் ரெசிடன்சி ஸ்கூலாக மாறியுள்ளது. போட்டியாளர்கள் அனைவரும் போட்டிப் போட்டு வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் தொடங்கியதில் இருந்து முதல் சீசன் முதல் தற்போது 9-வது சீசன் வரை அனைத்து சீசன்களிலும் பள்ளி டாஸ்க் நடைபெற்று வருகின்றது. இந்த டாஸ்கில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களாக பிரிந்து தொடர்ந்து வாரம் முழுவதும் விளையாடுவார்கள். இந்த விளையாட்டில் யார் நன்றாக விளையாடுகிறார்கள் என்று இறுதியாக தேர்ந்தெடுத்து அவர்கள் அடுத்த வாரத்திற்கான தலைவர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுகின்றது. இப்படி ஒவ்வொரு சீசனிலும் இந்த டாஸ்க் வழங்கப்படும் போது போட்டியாளர்கள் அனைவரும் சிரத்தை எடுத்துக்கொண்டு விளையாடுவது வழக்கமாக உள்ளது. முந்தைய சீசன்களில் ப்ரைமரி ஸ்கூலாக நிகழ்ச்சியில் இருக்கும். கடந்த இரண்டு சீசன்களிலும் மேல்நிலைப் பள்ளியாக பிக்பாஸ் வீடு மாறி தொடர்ந்து டாஸ்குகள் நடைப்பெற்று வருகின்றது.
இந்தநிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 52 நாட்கள் நிறைவடைந்தது. அதன்படி இந்த சீசனில் நேற்று முதல் பிக்பாஸ் வீடு பிக்பாஸ் ரெசிடன்சியல் ஸ்கூலாக மாறியுள்ளது. இதில் அமித் பார்கவ், பிரஜின், பார்வதி, கனி, எஃப்ஜே ஆகியோர் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் வேலை செய்பவர்களான கதாப்பாத்திரங்களிலும் மற்றப் போட்டியாளர்களான அரோரா, கம்ருதின் வியானா, சுபிக்ஷா, கானா வினோத், விக்ரம், ரம்யா, சபரி, சாண்ட்ரா, திவ்யா ஆகியோர் மாணவர்களாக மாறி விளையாடி வருகின்றனர்.




பிக்பாஸில் வியானாவில் விளையாட்டு விபரீதம் ஆனது:
இந்த நிலையில் ஸ்கூல் டாஸ்கில் போட்டியாளர்கள் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். இதில் குறும்பு செய்வதாக நினைத்து வியானா அமித்தின் ஷூக்களை எடுத்து மறைத்து வைக்கிறார். இதனால் அமித் மிகவும் கோபமடைந்து வியானாவிடம் கத்துகிறார். இதனால் வியானா அழுகும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. விளையாட்டு விபரீதம் ஆனது என்றே சொல்லலாம்.
Also Read… பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பிரபல நடிகை… இணையத்தில் வைரலாகும் வீடியோ
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day52 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/FuRmRsG3zD
— Vijay Television (@vijaytelevision) November 26, 2025
Also Read… நிறைவடைந்தது கருப்பு படத்தின் ஷூட்டிங்… ரிலீஸ் எப்போது தெரியுமா?