நிறைவடைந்தது கருப்பு படத்தின் ஷூட்டிங்… ரிலீஸ் எப்போது தெரியுமா?
Karuppu Movie Release Update: நடிகர் சூர்யா நடிப்பில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் கருப்பு. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் படம் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது கோலிவுட் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் தற்போது திரையரங்குகளில் வெளியாக வரிசையாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் கடந்த 2024-ம் ஆண்டே நடிகர் சூர்யா அவரது 45-வது படத்திற்காக இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி உடன் கூட்டணி வைத்ததாக அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான போது நடிகர் சூர்யா தனது 44-வது படமான ரெட்ரோ படத்தில் பிசியாக நடித்து வந்தார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படம் கடந்த மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த உடனே நடிகர் சூர்யா ஆர்.ஜே.பாலாஜி படத்தில் பிசியாக நடித்து வந்தார்.
படத்தின் பணிகள் தொடங்கி இரண்டு ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில் படம் இன்னும் வெளியாகாதது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து ரசிகர்களின் சோகத்தை போக்கும் விதமாக படக்குழு படத்திற்கு கருப்பு என்று பெயர் வைத்ததை அறிவித்தது. அதனைத் தொடர்ந்து படத்தின் டீசர் வெளியானது. அந்த டீசரைப் பார்க்கையில் படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ளது தெரியவந்தது. மேலும் இந்தப் படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து உள்ள நிலையில் படத்தில் இருந்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காட் மோட் என்ற பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியானது. இந்தப் பாடல் தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.




ஜனவரி 2026-ம் ஆண்டு வெளியாகும் கருப்பு படம்:
கருப்பு படம் கடந்த தீபாவளி பண்டிகைக்கே வெளியாக வேண்டி இருந்தது. ஆனால் இந்தப் படத்திற்கு தேவையான முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட வேண்டி இருந்ததால் படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போய்கொண்டே இருந்தது. இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் படம் வருகின்ற ஜனவரி மாதம் 23-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றது. இதுகுறித்து படக்குழு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… பென்ஸ் படத்தின் ஷூட்டிங்கை முடித்த நிவின் பாலி – வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
One of the most awaited film of 2026 #Karuppu in Cinemas from JANUARY 23rd ✅️
– Official Announcement expected very soon…💥#Suriya | #Suriya46 #Suriya47 pic.twitter.com/gCkU25YLb1
— Movie Tamil (@_MovieTamil) November 23, 2025
Also Read… இந்த கியூட் பாப்பா யார் தெரியுதா? அஜித் – விஜய் பட நாயகிதான்!