Parasakthi: ஜி.வி. பிரகாஷின் ஸ்பெஷல் பாடல்… பராசக்தி செகண்ட் சிங்கிள் ப்ரோமோ ரிலீஸ் எப்போது தெரியுமா?
Parasakthi 2nd Song Promo Update: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்துவருவருபவர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் பராசக்தி திரைப்படமானது வெளியீட்டிற்கு தயாராகிவரும் நிலையில், இப்படத்திலிருந்து தொடர்ந்து அப்டேட்டுகள் வெளியாகிவருகிறது. அந்த வகையில், இப்படத்தின் 2வது பாடல் ப்ரோமோ ரிலீஸ் எப்போது என்பது குறித்து படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) நடிப்பில், உண்மை கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள படம்தான் பராசக்தி (Parasakthi). இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்கியுள்ளார். சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படத்தை அடுத்ததாக இவரின் இயக்கத்தில் இப்படமானது மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஆக்ஷன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை ஸ்ரீலீலா (Sreeleela) நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர்கள் அதர்வா (Athrvaa), ரவி மோகன் (Ravi mohan) , ராணா, பேசில் ஜோசப் போன்ற பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை டான் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar) இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் உருவாகும் 100வது படமாக பராசக்தி உருவாகியுள்ளது. இப்படத்தில் முதல் பாடல் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது.
அதை தொடர்ந்து இப்படத்தின் 2வது பாடல் ப்ரோமோ ரிலீஸ் குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் 2வது பாடல் ப்ரோமோ வரும் 2025 நவம்பர் 22ம் தேதி மலை 5 :30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதை தொடர்ந்து 23ம் தேதி மாலை இப்பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




இதையும் படிங்க: ரிவால்வர் ரீட்டா படத்தின் கதை இதுதான் – வெளிப்படையாக சொன்ன கீர்த்தி சுரேஷ்!
பராசக்தி பட இரண்டாவது பாடல் ப்ரோமோ ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :
It’s time for our second single!
Promo out tomorrow at 5.30PM
This is a special one from @gvprakash ❤️#Parasakthi – hitting the screens worldwide on 14th January🧨🔥#ParasakthiFromPongal#ParasakthiFromJan14@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali… pic.twitter.com/Lopna8DeMJ— DawnPictures (@DawnPicturesOff) November 22, 2025
ஜி.வி. பிரகாஷின் இசையமைப்பில் உருவாகும் 100வது படமாக இந்த பராசக்தி அமைந்துள்ள நிலையில், இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் மிகவும் ஸ்பெஷலாக இசையமைத்துவருகிறார். இந்த படத்தில் முதல் பாடலான “அடி அலையே” என்ற பாடல் தற்போதுவரையிலும் ட்ரெண்டிங்கில் இருந்துவருகிறது.
இதையும் படிங்க: விஷாலுடன் பிறந்தநாள் கொண்டாடிய சாய் தன்ஷிகா.. ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் வீடியோ!
அந்த வகையில் இப்படத்தின் 2வது பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை சில நாட்கள் முன் ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டிருந்தார். யுவனின் குரலில் சிறப்பான பாடல்கள் 2வது பாடல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
மிக பிரம்மாண்டமாக தொடங்கிய ப்ரோமோஷன் பணிகள்
சிவகார்த்திகேயனின் இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போதிலிருந்தே இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. பேனர்கள் முதல் தொலைக்காட்சி விளம்பரங்கள் வரை இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சிறப்பாகவே நடைபெறுகிறது. இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகும் நிலையில், எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது.