Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Andrea Jeremiah: அரசன் படத்தில் நடிக்கிறேனா? ரசிகர்களுக்கு ஆண்ட்ரியா சொன்ன சர்ப்ரைஸ் தகவல்!

Andrea Jeremiah About Arasan Movie: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்துவருபவர் ஆண்ட்ரியா ஜெரெமையா. இவரின் நடிப்பில் மாஸ்க் திரைப்படம் இன்றுமுதல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இப்படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், அரசன் திரைப்படத்தில் நடிப்பது குறித்து தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

Andrea Jeremiah: அரசன் படத்தில் நடிக்கிறேனா? ரசிகர்களுக்கு ஆண்ட்ரியா சொன்ன சர்ப்ரைஸ் தகவல்!
ஆண்ட்ரியா மற்றும் சிலம்பரசன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 21 Nov 2025 16:43 PM IST

கோலிவுட் சினிமாவில் சிறந்த பாடகி மற்றும் நடிகையாக இருந்துவருபவர் ஆண்ட்ரியா ஜெரெமையா (Andrea Jeremiah). இவர் சினிமாவில் தொடர்ந்து படங்களில் பாடல்களை பாடிவந்தாலும், நடிப்பிலும் தற்போதுவரையிலும் ஆர்வம் காட்டிவருகிறார். பச்சைக்கிளி முத்துச்சரம் (Pachaikili Muthucharam) என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுஙங்கு போன்ற மொழிகளிலும் நடித்துவந்தார். இவர் தற்போது சினிமாவில் தொடர்ந்து சிறப்பான வேடங்களில் நடித்துவருகிறார். மேலும் இவர் தொடர்ந்து வெற்றிமாறனின் (vetrimaaran) இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகிவரும் படங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில் இயக்குநர் வெற்றிமாறனின் தயாரிப்பு மற்றும் இயக்குநர் விகர்ணன் அசோக் (Vikarnan Ashok) இயக்கத்தில் வெளியான படம்தான் மாஸ்க் (Mask) . இந்த படத்தில் ஆண்ட்ரியா ஜெரெமையா மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இவரின் நடிப்பில் உருவாகியிருந்த இப்படம் இன்று 2025 நவம்பர் 21ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இதில் லீட் கதாபாத்திரத்தில் நடிகர் கவின் (Kavin)நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் தொடர்பாக சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றி பேசிய ஆண்ட்ரியா ஜெரெமையா, அரசன் திரைப்படத்தில் நடிக்கிறாரா என்பது குறித்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: தனது புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்துவதாக வழக்கு தொடர்ந்த இளையராஜா – சென்னை உயர்நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு

அரசன் திரைப்படம் குறித்து தனது கருத்தை பகிர்ந்த நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா:

அந்த நேர்காணலில் ஆண்ட்ரியா ஜெரெமையா, “நான் எங்கு போனாலும் வடசென்னை திரைப்படம் பற்றித்தான் எல்லோரும் கேட்கிறார்கள். இந்த மாஸ்க் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு போனாலும், எல்லோரும் என்னை சந்திரா.. சந்திரா என்றுதான் அழைக்கிறார்கள். எனக்கே என்னவென்று புரியவில்லை. வெற்றிமாறன் சாரிடம் நான் நிறைய வருடமாக கூறிக்கொண்டுதான் இருக்கிறேன். சார்  எத்தனை படம் பண்ணாலும், மக்கள் வடசென்னை 2 படம் குறித்துதான் எதிர்பார்கிறார்கள்.

இதையும் படிங்க: விஜய் ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்… ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட புது அப்டேட்

மேலும் தற்போது வெற்றிமாறன் சார், அரசன் என்ற திரைப்படம் பண்ணுறாரு, இப்படம் வடசென்னை படத்தின் உலகத்தில் உருவாகிற படம். இப்போதுதான் அவரின் ரசிகர்களுக்கு எல்லாம் நிம்மதியாக இருக்கும் என அவர் தெரிவித்திருந்தார். மேலும் அதிலிருந்த செய்தியாளர் ஒருவர், உங்கள் கதாபாத்திரம் அரசன் திரைப்படத்தில் இருக்கிறதா? என கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த ஆண்ட்ரியா ஜெரெமையா, “ஒருவேளை இருக்கலாம்?” என கேள்வி குறியுடன் பதிலை தெரிவித்திருந்தார். இது ஒருவேளை உண்மையானால் ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையாவின் லேட்டஸ்ட் எக்ஸ் போஸ்ட்

நடிகை ஆண்ட்ரியா, பாடகி மற்றும் நடிகை ஆகியவற்றைத் தொடர்ந்து வெற்றிமாறனுடன் இணைந்து படங்களை தயாரித்தும் வருகிறார். மேலும் இவரின் நடிப்பில் உருவான மனுஷி மற்றும் பிசாசு 2 போன்ற திரைப்படங்கள் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.