Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வருங்கால மனைவி சாய் தன்ஷிகாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன விஷால் – வைரலாகும் பதிவு

Actor Vishal Special X Post: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷால் 45 வயதைக் கடந்தும் திருமணம் செய்யாமல் இருந்த நிலையில் சமீபத்தில் நடிகை சாய் தன்ஷிகாவை காதலிப்பதாக கூறி திருமண நிச்சயம் செய்துக் கொண்டார்.

வருங்கால மனைவி சாய் தன்ஷிகாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன விஷால் – வைரலாகும் பதிவு
சாய் தன்ஷிகா மற்றும் விஷால்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 20 Nov 2025 21:14 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இறுதியாக நடிகர் விஷால் நடிப்பில் வெளியான மத கஜ ராஜா படமும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. முழுக்க முழுக்க காமெடி மற்றும் ஆக்‌ஷன் பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் தற்போது மார்கன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இயக்குநருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அந்தப் படத்தை அவரே தற்போது இயக்கி வருகிறார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் விஷால் இயக்குநராக அறிமுகம் ஆகும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் நடிகர் விஷால் தற்போது வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்தப் பதிவில் நடிகையும் நடிகர் விஷாலின் வருங்கால மனைவியுமான சாய் தன்ஷிகாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு சாய் தன்ஷிகாவை புகழ்ந்து பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

என் வாழ்க்கையில் நீ வந்ததற்கு நன்றி:

அந்தப் பதிவில் விஷால் கூறியுள்ளதாவது, என் வாழ்க்கையின் ஒளி/காதலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். என் துணை / ஆத்ம துணைக்கு மீண்டும் பல மகிழ்ச்சியான பிறந்த நாள் வரவேணும். என் வாழ்க்கையில் வந்ததற்கும், உங்கள் வாழ்க்கை முறைகளால் மற்றவர்களை ஊக்குவிப்பதற்கும், என்னுடைய வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை கொண்டு வந்ததற்கும் நன்றி. தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருங்கள், அந்த நேர்மறையைப் பகிர்ந்து கொள்ளுங்கள், எங்களை என்றென்றும் ஒன்றாக இருக்க வைத்ததற்காக ஒவ்வொரு நிமிடமும் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார்.

Also Read… சூர்யாவிற்கு கதை சொன்ன சூர்யாஸ் சாட்டர்டே பட இயக்குநர் – உற்சாகத்தில் ரசிகர்கள்

நடிகர் விஷால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… மாஸ்க் முதல் மிடில் க்ளாஸ் வரை… இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படத்தின் லிஸ்ட்!