அது நான் இல்லை… என் போன் நம்பரும் இல்லை – ஸ்ரேயா சரண் பெயரில் நடந்த மோசடி!
Actress Shriya Saran: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் திருமணத்திற்கு பிறகு பெரிய அளவில் படங்களில் நடிக்காமல் உள்ளார். இந்த நிலையில் இவரது பெயரில் நடக்கும் மோசடி குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான இஷ்டம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை ஸ்ரேயா சரண் (Actress Shriya Saran). இவர் அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் தொடர்ந்து பலப் படங்களில் நடித்து வந்தார் நடிகை ஸ்ரேயா சரண். பான் இந்திய மொழிகளில் மட்டும் இன்றி ஹாலிவுட் படங்கள் சிலவற்றிலும் நடிகை ஸ்ரேயா சரண் தொடர்ந்து நடியாக நடித்து வந்தார். இவர் தமிழ் சினிமாவில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தில் இரண்டாம் நாயகியாக நடித்து இருந்தார். இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா தான் நாயகி என்றாலும் ஸ்ரேயா சரணின் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து நடிகை ஸ்ரேயா சரண் தமிழ் சினிமாவில் பலப் படங்களில் நாயகியாக நடித்துள்ளார். குறிப்பாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரவி மோகன், தனுஷ், ரஜினிகாந்த், விஜய், விஷால், விக்ரம், ஆர்யா, ஜீவா மற்றும் சிம்பு என பலருடன் இணைந்து நடித்துள்ளார். இவர் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் படங்கள் வெளியாகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிய நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான ரெட்ரோ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருந்தார். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நடிகை ஸ்ரேயாவை திரையில் பார்த்த ரசிகர்கள் அதே மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். தொடர்ந்து படங்கள் எதிலேயும் பெரிய அளவில் நடிக்காத நடிகை ஸ்ரேயா சரண் முக்கிய நடிகர்களின் படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி வருகின்றார்.




நடிகை ஸ்ரேயா சரண் பெயரில் நடந்த மோசடி:
இந்த நிலையில் நடிகை ஸ்ரேயா சரண் தனது பெயரில் மோசடி ஒன்று நடந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் நடிகை ஸ்ரேயா சரண் கூறியுள்ளதாவது, இந்த முட்டாள் யார்? தயவுசெய்து மக்களுக்கு எழுதுவதையும் நேரத்தை வீணடிப்பதையும் நிறுத்துங்கள்! துரதிர்ஷ்டவசமாக இது விசித்திரமானது. மக்களின் நேரத்தை வீணடிப்பதில் நான் வருத்தப்படுகிறேன்.
இது நான் அல்ல! எனது எண் அல்ல! இன்னும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இந்த மோசமான நபர் நான் போற்றும் மற்றும் வேலை செய்ய விரும்பும் நபர்களை அணுகுகிறார்! மிகவும் விசித்திரமானது! இதைச் செய்ய நீங்கள் ஏன் உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள்? வேறொருவரின் ஆள்மாறாட்டக்காரராக இல்லாமல், ஒரு வாழ்க்கையைத் தொடங்குங்கள் என்றும் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
Also Read… சூர்யா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்… கருப்பு படம் குறித்து வெளியான முக்கிய தகவல்
நடிகை ஸ்ரேயா சரண் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
Also Read… மணிரத்னத்தினத்தின் படம் குறித்து அப்டேட் சொன்ன தமிழ் பிரபா – உற்சாகத்தில் ரசிகர்கள்