ரஜினிகாந்தின் தலைவர் 173 படத்தை இயக்கும் நடிகர் தனுஷ்? இது புது ட்விஸ்ட்டா இருக்கே
Thalaivar 173 Movie: நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் தலைவர் 173. முன்னதாக இந்தப் படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்குவதாக அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் அவர் இந்தப் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
கோலிவுட் சினிமாவில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் விசயம் தலைவர் 173 படத்தை இயக்க உள்ளது யார் என்ற கேள்விதான். அதன்படி தற்போது நடிகர் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) ஜெயிலர் 2 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். தொடர்ந்து இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் படத்தை இயக்கி வருகிறார். அதன்படி முதல் பாகம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படம் வருகின்ற 2026-ம் ஆண்டில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் தலைவர் 173. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து இந்தப் படத்தை உலக நாயகன் கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 173 படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அதனை இயக்குநர் சுந்தர் சி இயக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பு வெளியாகி தொடர்ந்து ரசிகர்களிடையே வைரலாகி வந்த நிலையில் படத்தில் இருந்து விலகுவதாக இயக்குநர் சுந்தர் சி அறிவித்தார். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது.




தலைவர் 173 படத்தை இயக்கும் நடிகர் தனுஷ்:
அதன்படி இந்தப் படத்தை அடுத்ததாக யார் இயக்குவார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில் முன்னதாக இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது நடிகரும் இயக்குநருமான தனுஷ் இந்தப் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் முன்னாள் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கும் படங்கள் மட்டும் இன்றி அவர் இயக்கும் படங்களும் ரசிகரக்ளிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இதன் காரணமாக ரஜினியின் தீவிர ரசிகரான தனுஷ் அவரது படத்தை இயக்கினால் அது மாபெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Also Read… நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியான டியூட் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#Thalaivar173 – #Dhanush to Direct Superstar #Rajinikanth..😮💥 Discussions are said to be going on..🔥 Let’s see if this gets materialized..⭐ pic.twitter.com/72hI29kRkn
— Laxmi Kanth (@iammoviebuff007) November 16, 2025
Also Read… மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி இறுதியாக நடித்த BP180 படத்தின் ரிலீஸ் அப்டேட் இதோ