Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியான டியூட் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

Dude Movie OTT Review: தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக கலக்கி வருபவர் நடிகர் பிரதீப் ரங்கநாதன். இவரது நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற டியூட் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில் படத்தின் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியான டியூட் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
டியூட்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Nov 2025 20:28 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 17-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படம் டியூட். இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இந்த டியூட் படத்தை எழுதி இயக்கி இருந்தார். இவர் தமிழ் சினிமாவில் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் மமிதா பைஜூ, சரத்குமார், ரோகிணி, ஹிருது ஹரூன், ஐஸ்வர்யா சர்மா, திராவிட் செல்வம், வினோதினி வைத்தியநாதன், ஆவுடையப்பன்,
அகத்தியன் அரப்புக்கோட்டை, குழந்தை அனிஷா மாலிக், எம்.ஜே. ஸ்ரீராம்,
செல்லா, ரகுவரன், மனுஸ்ரீ கார்த்திகேயன், நேஹா ஷெட்டி, பெசன்ட் ரவி, சத்யா என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ள டியூட் படத்தின் விமர்சனம் இதோ:

அதன்படி இந்தப் படத்தில் 90ஸ் கிட்டாக பிரதீப் ரங்கநாதனும் அவரது மாமா பொண்ணான மமிதா பைஜூ 2கே கிட்டாகவும் இருக்கிறார். படத்தின் ஓபனிங் காட்சியிலேயே பிரதீப் ரங்கநாதன் தனது முன்னாள் காதலியின் திருமணத்திற்கு சென்று பிரச்னை செய்கிறார். இதன் காரணமாக போலீஸ் அவரை கைதும் செய்கிறது. தொடர்ந்து போலீஸ் ஸ்டேசனுக்கு மமிதா சென்று தனது தந்தை அமைச்சர் என்பதைக் கூறியும் பிரதீப் ரங்கநாதன் தனது அத்தை மகன் என்பதையும் கூறி வெளியே கூட்டி வருகிறார்.

பிரதீப் ரங்கநாதன் பிராங் மூலம் சர்ப்ரைஸ் ஈவண்ட் நடத்தும் கம்பெனி நடத்தி வருகிறார். இப்படி இருக்கும் சூழலில் பிரதீப் ரங்கநாதனி சர்ப்ரைசாக மமிதா ப்ரபோஸ் செய்கிறார். அனைவரின் முன்பும் அதனை ஏற்றுக்கொண்ட பிரதீப் தனியாக வரும்போது மமிதாவிடம் தனக்கு காதல் எண்ணன் உன்னிடம் இல்லை என்று கூறுகிறார். இதனால் மனமுடைந்த மமிதா ஊரை விட்டு வெளியூருக்கு படிக்க செல்கிறார்.

Also Read… தேரே இஸ்க் மெய்ன் பட ட்ரெய்லர் வருமா வராதா? தனுஷ் ரசிகர்கள் கேள்வி

மமிதாவை பிரிந்து வாழும் நாட்களில் பிரதீப்பிற்கு மமிதா மீது காதல் ஏற்படுகிறது. தொடர்ந்து அவர் தனது மாமாவன சரத்குமாரிடம் இதனை கூறி மமிதாவிற்கும் பிரதீப்பிற்கும் திருமண ஏற்பாடு நடைபெறுகிறது. திருமணத்திற்கு முதல் நாள் மமிதாவை சந்திக்கும் பிரதீப்பிற்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கின்றது.

மமிதா படிக்க சென்ற இடத்தில் ஒருவருடன் காதல் ஏற்பட்டுவிடுகிறது. இதனால் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறிகிறார். இதனை அவரது தந்தை சரத்குமாரிடம் தெரிவித்தால் அவர் மமிதாவை கொலை செய்துவிடுவார் என்பதை புரிந்துகொண்டு மமிதாவை அவரது காதலுடன் சேர்க்க முயற்சிக்கிறா பிரதீப். இறுதியில் அவர்களை எப்படி பிரதீப் ரங்கநாதன் சேர்த்து வைத்தார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… இதுக்கு இல்லையா சார் ஒரு எண்ட்… பிக்பாஸில் பார்வதியின் அடுத்த சண்டை – வைரல் வீடியோ இதோ