இதுக்கு இல்லையா சார் ஒரு எண்ட்… பிக்பாஸில் பார்வதியின் அடுத்த சண்டை – வைரல் வீடியோ இதோ
Bigg Boss Tamil Season 9: இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே ஒரே ஒரு போட்டியாளர் வீட்டில் உள்ள ஒட்டுமொத்த போட்டியாளர்களுடன் சண்டை போட்டுள்ளார் என்றால் அது வேறு யாரும் இல்லை விஜே பார்வதி தான்.
என்னங்க பிக்பாஸ் இதுக்கு ஒரு எண்ட் இல்லையா என்று ரசிகர்கள் கதறும் அளவிற்கு உள்ளது இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி. தொடர்ந்து தற்போதைய சமூகத்தில் டாக்சிக் என்ற வார்த்தை மிகவும் அறியப்பட்ட ஒன்றாக உள்ளது. டாக்சிக் என்பதன் பொருள் என்ன என்றால் மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை அவர்களால் பார்க்கவே முடியாது. மேலும் அந்த டாக்சிக் எண்ணம் கொண்ட நபருடன் பழகுவதும் கடினமான ஒன்று. தன்னுடன் இருப்பவர்களும் மிகவும் எளிதாக மன அழுத்தத்தில் தள்ளக்கூடிய திறமை படைத்தவர்களாக இந்த டாக்சிக் எண்ணம் கொண்டவர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் சூழலில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் அப்படி ஒரு நபர் இருக்கிறார் என்று மக்கள் அதிகமாக கூறுவது பார்வதி தான். விஜே பாரு என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் அந்த நபர் தன்னுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டி போடும் போட்டியாளர்கள் அனைவரிடம் சண்டையிட்டுள்ளார் என்பது நிதர்சனமான உண்மை.
இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 40 நாட்கள் நிறைவடைகிறது. இந்த 40 நாட்களிலும் ஒரு நாள் கூட பார்வதி யாரிடமும் சண்டையிடாமல் சென்றதே இல்லை என்பது போல தினமும் எதாவது ஒரு காரணத்திற்காக யாரிடமாவது சண்டையிட்டுக்கொண்டே இருக்கிறார். பிக்பாஸ் என்றாலே கூச்சலும் குழப்பமும் நிறைந்த ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்து அவர் அதனை செய்கிறாரா? அல்லவது அவருடைய நிஜமானா குணமே அதுதானா என்பது போல சண்டை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.




இன்று பார்வதியிடம் சண்டையில் சிக்கிய கனி திரு:
அதன்படி இன்று 40வது நாளிற்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவைப் பார்த்த போது பிக்பாஸில் உள்ள அரோராவின் கேரக்டர் குறித்து திவாகரிடம் பார்வதி கிசுகிசு பேசிக் கொண்டிருந்தது தெரிந்தது. இந்த நிலையில் 3-வது ப்ரோமோ வீடியோவைப் பார்க்கும் போது அப்படி பேசிக்கொண்டிருந்த போது இந்த வார வீட்டு தல சபரி இருவரையும் சாப்பிட கூப்பிடுகிறார்.
கூப்பிட்ட உடனே செல்லாத பார்வதி உள்ளே சென்று கேள்வி எழுப்பிய கனி மற்றும் அமித்திடம் சண்டை போடுகிறார். இதில் அவர் அதிகமாக் கனியை டார்க்கெட் செய்து சண்டையிடும் வீடியோவை பிக்பாஸ் நிகழ்ச்சி குழு தற்போது வெளியிட்டுள்ளது.
Also read… சலிப்பே தட்டாத வாரணம் ஆயிரம்.. 17 ஆண்டுகளை கடந்தும் எவர்கிரீன்.. அப்படி என்ன ஸ்பெஷல்?
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவு:
#Day40 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/5EDFd4lOYM
— Vijay Television (@vijaytelevision) November 14, 2025
Also read… AK 64 படத்தை தயாரிப்பதில் இருந்து விலகிய பிரபல நிறுவனம்? வைரலாகும் தகவல்