Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஊர்வசியில் அசத்தலான நடிப்பில்  ஹாட்ஸ்டாரில் இந்தப் அப்பத்தா படத்தை மிஸ் செய்யாதீர்கள்

Appatha Movie: இந்திய சினிமாவில் தனது திறமையான நடிப்பின் மூலமாக ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நடிகையாக வலம் வருகிறார் நடிகை ஊர்வசி. இவரது நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த அப்பத்தா அப்டத்தை தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்.

ஊர்வசியில் அசத்தலான நடிப்பில்  ஹாட்ஸ்டாரில் இந்தப் அப்பத்தா படத்தை மிஸ் செய்யாதீர்கள்
அப்பத்தாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Nov 2025 21:30 PM IST

தமிழ் சினிமாவில் முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார் ஊர்வசி (Actress Urvashi). தனது 13 வயதிலேயே நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது 40 ஆண்டுகளைக் கடந்து தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். இவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள் மட்டும் இன்றி பிரபலங்களும் தொடர்ந்து பிரமித்து வருகின்றனர். சின்ன பட்ஜெட் படம் அல்லது பெரிய பட்ஜெட் படம், சினிமாவில் பெரிய அளவில் அறிமுக இல்லாத நடிகர்கள் அல்லது பெரிய நடிகர்கள் என யார் படமாக இருந்தாலும் இறுதியில் அதனைப் பார்க்க்கும் ரசிகர்கள் இது ஊர்வசி படம் என்று கூறும் அளவிற்கு அவரது நடிப்பு சிறப்பானதாக இருக்கும். தற்போது தொடர்ந்து அம்மா கதாப்பாத்திரத்தில் பலப் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகை ஊர்வசி நடிப்பில் கடந்த 29-ம் தேதி ஜூலை மாதம் 2023-ம் ஆண்டு நேரடியாக ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியானது.

இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஜான் பிரிட்டோ, ஹர்திக் கஜ்ஜர் மற்றும் தீப்தி கோவிந்தராஜன் ஆகியோர் இணைந்து படத்திற்கு திரையக்கதையை எழுதினர். மேலும் இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான ஜியோஸ்டுடியோஸ் மற்றும் வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் ஆகியவை சார்பாக தயாரிப்பாளர்கள் ஜோதி தேஷ்பாண்டே, சுரேஷ் பாலாஜே மற்றும் ஜார்ஜ் பயஸ் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர்.

ஊர்வசியின் அப்பத்தா படத்தின் கதை என்ன?

ஊர்வசி தனது மகன் சிறுவயதில் இருக்கும் போதே கணவரை இழைந்து சிங்கிள் மதராக வளர்க்கிறார். ஆனல் அவரது மகனுக்கு ஊர்வசியை தனது தாய் என்று சொல்லிக்கொள்ளவே கூச்சமாக இருக்கிறது. மேல் படிப்பிற்காக சென்னைக்கு செல்லும் ஊர்வசியின் மகன் அங்கையே ஒரு வட இந்திய பெண்ணை காதலித்து திருமணம் செய்துவிடுகிறார்.

அதனைத் தொடர்ந்து 8 வருடங்களாக தனது அம்மாவைக்கூட வந்து அவர் பார்க்கவில்லை. ஒரு போன் செய்துகூட ஊர்வசியிடம் பேசுவது இல்லை. ஆனால் இதை எதையும் வெளியே காட்டாமல் தனது மகனை விட்டுக்கொடுக்காமல் இருக்கிறார் ஊர்வசி. சொந்த ஊரில் ஊர்காய் போட்டுக்கொண்டு ஃபேமஸானவராக வலம் வரும் ஊர்வசியை மகன் சென்னைக்கு அழைக்கிறார்.

Also Read… மன்மதனே நீ கலைஞன் தான்… 21 ஆண்டுகளை நிறைவுச் செய்தது சிலம்பரசனின் மன்மதன் படம்

மகிழ்ச்சியாக சென்னைக்கு சென்ற ஊர்வசிக்கு அங்கு போனதுக்கு அப்பறம் தான் தெரியும் ஊர்வசியின் மகன் குடும்பத்துடன் சுற்றுழா செல்வதால் வீட்டில் உள்ள நாய்க்கு காவல் இருக்கவே அம்மாவை அழைத்துள்ளார். சிறு வயதில் இருந்தே நாய் என்றால் பயமாக இருந்த ஊர்வசி ஒரு கட்டத்தில் நாயுடன் எமோஷ்னல் கனெக்ட் ஆகிவிடுகிறார். தொடர்ந்து மகனிடம் கிடைக்காத அன்பை அந்த நாயிடம் காண்கிறார். இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை.

Also Read… பராசக்தி படத்திற்காக பாடல் பாடிய யுவன் சங்கர் ராஜா – ஜிவி பிரகாஷ் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு