Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Urvashi: டேக் இட் ஈஸி ஊர்வசி பாடல் இப்படித்தான் வந்தது.. நடிகை ஊர்வசி சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!

Urvashi About Take it Easy Urvashi Song: மலையாள சினிமாவின் மூலம் படங்களில் அறிமுகமானவர் ஊர்வசி. இவரின் நடிப்பில் தமிழ், கன்னடம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் காதலன் படத்தில் டேக் இட் ஈஸி ஊர்வசி பாடல் வந்த கதையை குறித்து அவர் ஓபனாக பேசியுள்ளார்.

Urvashi: டேக் இட் ஈஸி ஊர்வசி பாடல் இப்படித்தான் வந்தது.. நடிகை ஊர்வசி சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!
ஊர்வசி Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 03 Nov 2025 19:24 PM IST

தென்னிந்திய சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்துவந்தவர் ஊர்வசி (Urvashi). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என பல்வேறு மொழிகளில் படங்ககள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இவர் தற்போது சினிமாவில் முக்கிய வேடங்களில் நடித்துவருகிறார். நடிகர்களுக்கு அம்மா மற்றும் சிறப்பு வேடத்திலும் நடிகை ஊர்வசி நடித்துவருகிறார். தமிழ் சினிமாவில் இவருக்கு முதல் திரைப்படமாக அமைந்த்திருந்தது முந்தானை முடிச்சி (Munthanai Mudichu). இந்த படத்தை இயக்குநரும் நடிகரான கே.பாக்கியராஜ் (K. Bhagyaraj). மேலும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாகத்தான் நடிகை ஊர்வசி நடித்திருந்தார். இந்த படம் அவரின் முதல் திரைப்படம் என்றாலும், ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் நடிகர் ஊர்வசி சமீபத்தில் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது (National Award) பெற்றிருந்தார்.

இதற்காக பல்வேறு பாராட்டுகளும் இவருக்கு சமீபத்தில் கிடைத்திருந்தது. அந்த வகையில் இவர் தொடர்ந்து படங்களில் நடித்தும் வருகிறார். இந்நிலையில் இவர் முன்பு ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். அதில் காதலன் படத்தில் “டேக் இட் ஈஸி ஊர்வசி பாடல்” (Take it easy Urvashi) எப்படி வந்தது. அதன் கதை என்ன என்பது குறித்து ஓபனாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: நான் நிஜத்தில் இப்படித்தான்.. எனக்கு முன் கோபம் ஜாஸ்தி – அஜித் குமார் பகிர்ந்த விஷயம்!

டேக் இட் ஈஸி ஊர்வசி பாடல் வந்த கதை குறித்து பகிர்ந்த ஊர்வசி :

அந்த நேர்காணலில் நடிகை ஊர்வசி, “நான் மகளீர் மட்டும் என்ற திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது, “கறவைமாடு மூணு , காளைமாடு ஒன்னு”என்ற பாடல் அப்படத்தில் இடம்பெற்றிருந்தது. நான் உடனே ரேவதியிடம் என்னடி இது இப்படி ஒரு வார்த்தையை பாட்டில் யூஸ் பண்ணிருக்காங்க, அது எப்படி நாமளே இந்த பாட்டுக்கு நடனமாடி , பாடுவது. என்னால் பண்ணமுடியாதது என கூறினேன். அதை உடனே இயக்குநரிடம் சொல்லியிருந்தேன், அவர் தெலுங்கு இயக்குநர்.

இதையும் படிங்க: நடிகை நதியாவின் இளமை ரகசியம் இதுவா? அவரே சொன்ன சீக்ரட் விஷயம்!

அவரிடம் சார் இந்த மாதிரியான வார்த்தைகளை பாடலில் வைத்திருக்கிறார்கள் என கேட்டேன், அதற்கு அவரும் குடும்பத்திற்காக உழைக்கும் பெண்களைத்தான் என்று கூறுவார்கள் என்றார். அது ஒரு சாதாரணமான விஷயம் என கூறினார். இந்த பாடலை எழுதியவர் வாலி சார்தான். உடனே இந்த நியூஸ் அவருக்கு சென்றுவிட்டது. அதற்கு பின்னாடிதான் காதல் படத்தில் டேக் இட் ஈஸி ஊர்வசி பாடல் என்ற பாடல் வந்தது” என நகைச்சுவையாக அதில் அவர் பகிர்ந்திருந்தார்.

ஊர்வசியின் ஆஷா திரைப்படத்தின் முதல் பார்வை பதிவு ;

அறிமுக இயக்குநர் சஃபர் சனல் இயக்கத்தில் நடிகை ஊர்வசி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம்தான் ஆஷா. இதில் நடிகர்கள் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, விஜயராகவன் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துவருகின்றனர். இப்படம் ஷூட்டிங் நடைபெற்றுவரும் நிலையில், விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.