Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Sarathkumar: ரவிக்குமார் சார் ஷூட்டிங்கில் மைக்கை தூக்கி அடிப்பாரு.. சரத்குமார் சொன்ன உண்மை!

Sarathkumar About Ravikumar On-Set Anecdotes : 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நாயகனாக வலம்வந்தவர் சரத்குமார். இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. இந்நிலையில் இவர் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரின் பட ஷூட்டிங்கில், அவர் மைக்கை தூக்கி அடிப்பார் என ஓபனாக பேசியுள்ளார் அது குறித்துப் பார்க்கலாம்.

Sarathkumar: ரவிக்குமார் சார் ஷூட்டிங்கில் மைக்கை தூக்கி அடிப்பாரு.. சரத்குமார் சொன்ன உண்மை!
சரத்குமார் மற்றும் கே எஸ் ரவிக்குமார்Image Source: Social media
Barath Murugan
Barath Murugan | Published: 19 Oct 2025 21:22 PM IST

நடிகர் சரத்குமார் (Sarathkumar) என்றாலே அவரின் நடிப்பில் முழுவதும் ஆக்ஷ்ன் திரைப்படங்கள்தான் இருக்கும். மேலும் குடும்பம் சார்ந்த கதைக்களத்தில் பல படங்களைக் கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார். இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார். இவரின் நடிப்பில் இன்றுவரையிலும் மக்களால் ரசிக்கப்பட்டுவரும் படம் என்றால் அது சூர்ய வம்சம் (Surya Vamsam) திரைப்படம்தான். இந்த படத்தில் ரெட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கிராமத்து நாயகனாகவே நடித்திருந்தார். மேலும் தற்போது சினிமாவில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். நடிகர்கள் அல்லது நடிகைகளின் அப்பாவாக, சிறப்பு வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவரின் நடிப்பில் கிடந்த 2023ம் ஆண்டு வெளியான போர் தொழில் (por thozhil) என்ற திரைப்படமானது வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

இந்த படத்தில் அசோக் செல்வனுடன் (Ashok Selvan),போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தவிருந்தார். இந்த படங்களைத் தொடர்ந்து, 3BHK மற்றும் டியூட் படங்களில் மாறுபட்ட இடங்களில் இவர் நடித்திருந்தார். இந்நிலையில், இவர் முன்னதாக பேசியிருந்த நேர்காணல் ஒன்றில் அவர், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாருடன் (KS Ravikumar) பணியாற்றியதைப் பற்றியும், அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் எவ்வாறு இருப்பார் என்பதை பற்றியும் வெளிப்படையாகப் பேசியிருந்தார். அதைப் பற்றி பார்க்கலாம்.

இதையும் படிங்க: அஞ்சாதே படத்தில் பாண்டியராஜன் நடிக்க முதலில் ஒத்துக்கவே இல்லை – இயக்குநர் மிஷ்கின்

டியூட் படம் குறித்து சரத்குமார் வெளியிட்ட பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Sarath Kumar (@r_sarath_kumar)

இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரைப் பற்றி சரத்குமார் சொன்ன விஷயம் :

அந்த நேர்காணலில் சரத்குமார், இயக்குநர் ரவிக்குமாருடன் இணைந்துதான் கலந்துகொண்டார். அதில் பேசிய சரத்குமார், “இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் சார் டிரெக்ஷ்ன் என்றால் அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் , 2 – 3 மைக் இருக்கும். ஏனென்றால், மைக்கை பறக்கவிடுவார். மைக் வேலை செய்யாதிருந்தால் அல்லது எது என்றாலும் மைக்கைதான் தூக்கி அடிப்பார். அவ்வாறு மைக்கை சேதரவிடுவார். ஆனால் அவர் நிறையத் திறமைகள் இருக்கிறது. நாட்டாமை ஷூட்டிங்கின் போது, ரவிக்குமார் ராசிக்கும் கேமரா மீனுக்கும் பெரிய சண்டை நடந்தது.

இதையும் படிங்க: கர்ணன் படத்துல அந்த ஒரு ஷாட்தான் நாம் ரொம்ப எஞ்சாய் பண்ணேன் – இயக்குநர் மாரி செல்வராஜ்!

அப்போது நான் குஷ்பு, மீனா என எல்லாரும் பேசாமல் இருந்தோம். அப்போது நடந்த சண்டையில் கேமரா மேன், கேமராவை போட்டுவிட்டு போய்ட்டாரு. அப்போது ரவிக்குமாரை அசிஸ்டன்ட் கேமராமேனை எடுக்க சொன்னார், அவர்கள் சீனியர் கேமரா மேன் இல்லை என்ற காரணத்தால் எடுக்கப் பயப்படுகின்றனர். இதை யோசித்த ரவிக்குமார் சார், அவரே ஷூட்டிங் செய்தார். சண்டைக்குப் பின் அன்று எடுக்கப்பட்ட எல்லாம் காட்சிகளையும் அவரே ஷூட்டிங் செய்தார் என நடிகர் சரத்குமார் ஓபனாக பேசியிருந்தார். இது குறித்து அவரின் அருகிலிருந்த இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரும் அதை ஒத்துக்கொண்டார் .