விருமாண்டி படத்துக்கு இசையமைக்கமாட்டேன் என சொன்னேன்.. இளையராஜா ஓபன் டாக்!
Ilayaraja Talk About Virumaandi Movie : தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர், இசைஞானி இளையராஜா. இவர் முன்னதாக கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் கமல்ஹாசனின் விருமாண்டி படத்தில் முதலில் இசையமைக்கமாட்டேன் எனக் கூறியது பற்றி ஓபனாக பேசியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) எழுத்து மற்றும் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விருமாண்டி (Virumaandi) . இந்த படத்தில் அவரே முன்னணி கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படமானது அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் காதல் கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் நடிகர் கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடிகை அபிராமி (Abhirami) நடித்திருந்தார். மேலும் முக்கிய வேடத்தில் நடிகர்கள் பசுபதி (Pasupathi) மற்றும் நெப்போலியன் (Napoleon) இணைந்து நடித்திருந்தனர். கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான இப்படமானது சுமார் 21 வருடங்களைக் கடந்து தற்போது வரையிலும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இந்த படமானது வெளியான ஆண்டில் சுமார் 100 நாட்களுக்கும் மேலாகத் திரையரங்குகளில் ஓடி வெற்றிப்படமாக அமைந்தது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா (Ilaiyaraaja) இசையமைத்திருந்தார். இந்நிலையில், முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய இளையராஜா. இந்த படத்தில் ஆரம்பத்தில் இசையமைக்கமாட்டேன் என விலக்கியதாகவும், மீண்டும் சேர்ந்த காரணம் பற்றியும் ஓபனாக பேசியுள்ளார். அதைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.
இதையும் படிங்க : படையப்பா படத்தில் அந்த காட்சியில் ரஜினி நடிக்க ஒத்துக்கல.. கே.எஸ். ரவிக்குமார் உடைத்த உண்மை!
விருமாண்டி படத்தில் இசையமைத்ததுப் பற்றி இளையராஜா பேச்சு
முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய இளையராஜா, ஆரம்பத்தில் விருமாண்டி படத்தைப் பார்த்ததும் நான் இதற்கு இசையமைக்கமாட்டேன் எனக் கூறினேன். படமும் முழுக்க சண்டை மற்றும் ரத்த காட்சிகள் இருந்த காரணத்தால் நான் இசையமைக்கமாட்டேன் எனக் கமலிடம் கூறிவிட்டேன். வேற யாரையாவது இசையமைப்பாளராக வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினேன். அதன் பிறகு கமல்ஹாசன் 2 நாட்களுக்குப் பின் என்னைச் சந்திக்க வந்தார். அதன் பிறகு கமல் என்னிடம், சார் அந்த சீன பார்த்தீர்களா என்று கேட்டார். நான் அவரிடம் படமெல்லாம் வெட்டுக் குத்தாக இருக்கும் என நான் நினைத்தேன், ஆனால் காதல் காட்சிகளும் இடம்பெற்றிருக்கிறதா என ஆச்சரியப்பட்டேன்.
இதையும் படிங்க : விஜய் சேதுபதியால் மாறிய வாழ்க்கை… ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்ன தகவல்!
அதன் பிறகுதான் அந்த படத்தில் பணியாற்ற ஒத்துக்கொண்டேன். அப்போதுதான் சண்டைக் காட்சிகளுடன் இருக்கும் அந்த படத்தில், உன்னைவிட என்பது போல இப்படத்தில் ஒரு பாடல் இடம்பெறவேண்டாமா என அவரிடம் கேட்டேன். உடனே கமல்ஹாசன் வச்சிருங்க இப்படி ஒரு பாடல் நிச்சயம் இப்படத்திற்குத் தேவை என்று கூறினார். அந்த பாடலின் முதல் வரியை மட்டும்தான் நான் சொன்னேன், மற்றது எல்லாம் கமல் ஹாசன்தான் எழுதினார்” என இசைஞானி இளையராஜா ஓபனாக பேசியிருந்தார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.