தேவா இசையில் பாடிய மு.க.முத்து – என்ன படம் தெரியுமா?
M.K. Muthu’s Voice : முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து பிள்ளையோ பிள்ளை, நம்பிக்கை நட்சத்திரம், சமையல்காரன் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் சினிமாவில் பாடலும் பாடியுள்ளார் என்பது பலருக்கும் தெரியாத செய்தி. இந்த கட்டுரையில் அது என்ன பாடல், பாடல் இடம்பெற்ற திரைப்படம் உள்ளிட்டவை குறித்து பார்க்கலாம்.

முன்னாள் முதல்வர் மு.க.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து (M.K.Muthu) உடல் நலக்குறைவால் ஜூலை 19, 2025 அன்று காலமானார். அவருக்கு வயது 77. அவரது மறைவு திமுக தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது உடல் கலைஞர் கருணாநிதியின் கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் (M.K.Stalin) நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார். மேலும் திரையுலகைச் சேர்ந்த பாடலாசிரியர் வைரமுத்து (Vairamuthu), நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், பெரியப்பா மு.க.முத்து மறைந்தாலும், அவரது நினைவுகள் என்றும் எங்களுடன் இருக்கும் என்று பேசினார். மு.க.முத்து சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
மு.க.முத்து ஹீரோவாக நடித்த படங்கள்
கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். கடந்த 1972 ஆம் ஆண்டு வெளியான பிள்ளையோ பிள்ளை என்ற படத்தில் மு.க.முத்து ஹீரோவாக நடித்துள்ளார். அதுவும் தனது முதல் படத்திலேயே குமார், கண்ணன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். கிருஷ்ணன் – பஞ்சு இரட்டை இயக்குநர்கள் இயக்கிய இந்தப் படத்தில் மு.க.முத்துவுடன் இணைந்து விஜயகுமாரி, லட்சுமி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்தனர். இந்தப் படத்துக்கு மு.கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். அஞ்சுகம் பிக்சர்ஸ் சாரிபில் முரசொலி மாறன் இந்தப் படத்தை தயாரித்திருந்தார்.




இதையும் படிக்க: கலைஞரின் மூத்த மகன்.. மு.க முத்து உடல்நலக்குறைவால் காலமானார்.. முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
அதன் பிறகு அவர் பூக்காரி என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். அதன் பிறகு சமயல்காரன், அணையா விளக்கு, நம்பிக்கை நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
பாடகராக மு.க.முத்து
மு.க.முத்து நல்ல பாடகர் என அவரைப் பற்றி நன்கு தெரிந்த பலரும் சொல்லியிருக்கின்றனர். அவருக்கு தான் ஒரு பாடகராக வேண்டும் என்ற விருப்பம் இருந்ததாகவும் கூறப்படுவதுண்டு. இந்த நிலையில் அவரது விருப்பம் தேவா இசையில் நிறைவேறியது. பிரபல இயக்குநர் பவித்ரன் இயக்கத்தில் தேவாவின் இசையில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான படம் மாட்டுத்தாவனி. இந்தப் படத்தில் இடம்பெற்ற அண்ணன்மாரே என்ற பாடலையும் அவர் பாடியிருக்கிறார்.
இதையும் படிக்க: முதல் பாதியைக் கேட்ட பிறகு, கூலியில் ரஜினி நடிக்க முடிவு செய்தாரா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்!
நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், கலைஞரின் புதல்வரும், தமிழ்நாடு முதல்வரின் சகோதரரும் மு.க.முத்து மறைந்து விட்டார் என்ற செய்தி பெரும் துயரைத் தருகிறது. அவருக்கு என் எனது இரங்கல்கள் என குறிப்பிட்டுள்ளார்.
மு.க.முத்துவுக்கு மறைவுக்கு கமல்ஹாசன் வெளியிட்ட இரங்கல் பதிவு
கலைஞரின் புதல்வரும், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @mkstalin அவர்களின் சகோதரருமான மு.க.முத்து அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி பெரும் துயரைத் தருகிறது. அவருக்கு என் இரங்கல்கள். அவர்தம் குடும்பத்தாருக்கு என் நெஞ்சார்ந்த ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) July 19, 2025