Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கலைஞரின் மூத்த மகன்.. மு.க முத்து உடல்நலக்குறைவால் காலமானார்.. முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

M.K. Muthu Demise: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு க முத்து உடல் நலக்குறைவால் இன்று அதாவது ஜூலை 19 20 25 அன்று காலமானார். இவரது உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

கலைஞரின் மூத்த மகன்.. மு.க முத்து உடல்நலக்குறைவால் காலமானார்.. முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
மு.க் முத்து
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 19 Jul 2025 10:45 AM

மு.க முத்து மறைவு, ஜூலை 19, 2025: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு க முத்து உடல் நலக்குறைவால் இன்று அதாவது ஜூலை 19 20 25 அன்று காலமானார். அவருக்கு வயது 77 ஆகும். கருணாநிதி மற்றும் அவரது மூத்த மனைவி பத்மாவதி தம்பதியருக்கு இவர் மூத்த மகனாக பிறந்தவர். மு க முத்து தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது பிள்ளையோ பிள்ளை, அணையா விளக்கு, பூக்காரி உள்ளிட்ட திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 1970களில் இவர் தமிழ் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். எம்.ஜி.ஆருக்கு போட்டியாக கருணாநிதியால் திரைத்துறைக்குள் கொண்டுவரப்பட்டவர் தான் மு க முத்து. நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவர் இவர். தந்தை கலைஞர் கருணாநிதிக்கு கலையின் மீது இருந்த ஆர்வம் இவருக்கும் இருந்ததாக கூறப்படுகிறது.

பன்முகதன்மை கொண்ட மு.க முத்து:

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் ஆன மு.க முத்து திராவிட முன்னேற்ற கழக கட்சிக்காக மேடையில் சில பாடல்களை பாடியுள்ளார். மு க முத்து இளம் வயதில் பார்ப்பதற்கு எம்.ஜி.ஆர் போன்ற தோற்றத்தை உடையவர் எனவும் மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இதற்காக இவர் சென்னையில் தங்கியிருந்தார்.

மேலும் படிக்க: இளைஞர்களை திசை திருப்பவே சீமானின் இந்த கோமாளித்தனம் – விசிக பொதுச் செயலாளர் வன்னி அரசு..

உடல்நலக்குறைவால் காலமானார்:

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் ஜூலை 19 2025 தேதியான இன்று காலை உடல் நல குறைவால் காலமானார். இவரது மறைவு திமுக தொண்டர்கள் மற்றும் திரையுலகினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலரும் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கக்கூடிய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மதுரையில் வரதட்சணை கொடுமை: அடித்து துன்புறுத்திய காவலர் கணவர் கைது..!

முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி:


மு க முத்துவின் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு க ஸ்டாலினின் சகோதரரான மு க முத்து உயிரிழந்ததை தொடர்ந்து, இன்று நடைபெற இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.