உத்தரப் பிரதேசத்தில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சிறுவனின் மோமோ மீதான ஆசை, அவரது குடும்பத்தை 85 லட்சம் மதிப்புள்ள நகைகளை இழக்கும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தின் டேயோரியா நகரில் நடந்துள்ளது. வாரணாசியை சேர்ந்த கோவில் அர்ச்சகர் விம்லேஷ் மிஸ்ராவின் மகன் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுவனுக்கு மோமோவின் மீது அளவுக்கு மீறிய ஆசை இருந்ததாக கூறப்படுகிறது.