Shruti Haasan : திருமணத்தில் நம்பிக்கை இல்லை.. மனம் திறந்த நடிகை ஸ்ருதி ஹாசன்!
Shruti Haasan About Concept Of Marriage : தமிழ் சினிமாவில் உச்ச நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் தென்னிந்திய மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்தது வருகிறார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர் திருமணம் என்ற கருத்தில் நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளார். அது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் மக்களால் உலக நாயகன் என்று அழைக்கப்படுவர் நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) . இவரின் மூத்த மகள்தான் நடிகை ஸ்ருதி ஹாசன் (Shruthi Haasan) . இவரும் தனது தந்தையை போல சினிமாவில் நடிப்பின் மீது ஆர்வம் கொண்டவர். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் தென்னிந்தியப் பிரபல நடிகைகளில் ஒருவராகவும் வலம்வருகிறார். இவர் தமிழில் அஜித் குமார் (Ajith Kumar) முதல் தளபதி விஜய் (Thalapathy Vijay) வரை பல நடிகர்களுடன் ஜோடியாகத் திரைப்படங்களில் நடித்து ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார். மேலும் தமிழ் சினிமாவை தொடர்ந்து தெலுங்கு மொழிகளில் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் இவர் தமிழில் கூலி (Coolie), ஜன நாயகன் (Jana Nayagan) மற்றும் டிரெயின் போன்ற திரைப்படங்களிலும் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
மேலும் தெலுங்கிலும் புதிய படங்களில் நடிப்பதற்காகவும் ஒப்பந்தமாகி வருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் வெளியீட்டிற்குக் கடத்திருக்கும் திரைப்பட கூலி. நடிகர் ரஜினிகாந்த்தின் (Rajinikanth) முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும், இப்படத்தில் அவரின் மகள் கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார்.
இதையும் படிங்க : கயாடு லோஹர் தவறவிட்ட 2 படங்கள்.. என்ன தெரியுமா?




இப்படம் வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியாகிறது. இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஸ்ருதி ஹாசன், திருமணத்தின் மீதான தனது கருத்தை பற்றி ஓபனாக பேசியுள்ளார்.
திருமணம் குறித்த கருத்து பற்றி நடிகை ஸ்ருதி ஹாசன் பேச்சு :
அந்த நேர்காணலில் பேசிய நடிகை ஸ்ருதி ஹாசனிடம் திருமணத்தைப் பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டது. அதில் அவர், “எனக்குத் திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை, ஆனால் காதல் போன்றவற்றின் மீது நம்பிக்கை இருக்கிறது. ஆனால் திருமணம் என்ற கருத்தைப் பற்றி பயமாக இருக்கிறது. பல நேரங்களில் நான் நானாகவே இருக்க, வாழ்க்கையில் கடினமாக உழைத்திருக்கிறேன்.
இதையும் படிங்க : வடிவேலு – ஃபகத் பாசிலின் ‘மாரீசன்’ படக் கதை இதுவா? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
தாலி மற்றும் திருமணம் எனக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. ஒரு திருமணத்திற்கான மதிப்பைக் காட்டும் மற்றும் அடையாளம் படுத்தும் விஷயங்களை மதித்தாலும், அதெல்லாம் எனக்கு அப்படித்தான் மதிப்பு மிக்கதாக ஆக்கவேண்டுமென்ற ஆவணங்கள் எனக்குத் தேவையில்லை. நானும் ஒருமுறை திருமணத்திற்கான விளிம்பிற்கே சென்றுவிட்டேன். ஆனால் அந்த விஷயம் எனக்குச் சரியாக அமையவில்லை” என நடிகை ஸ்ருதி ஹாசன் பேசியிருந்தார். இந்த தகவலானது மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது