Kayadu Lohar : கயாடு லோஹர் தவறவிட்ட 2 படங்கள்.. என்ன தெரியுமா?
Kayadu Lohar Missed Films : தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் கயாடு லோஹர். இப்படத்தைத் தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமான நிலையில், அவர் தவறவிட்ட 2 படங்கள் என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.

நடிகை கயாடு லோஹர் (Kayadu Lohar) தமிழில், கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியான டிராகன் (Dragon) படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் இந்த படத்திற்கு முன் மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த வைகையில் இவருக்கு டிராகன் படமானது தமிழ் அறிமுக திரைப்படமாக அமைந்திருந்தது. இந்த படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு (Pradeep Ranganathan) ஜோடியாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் வெளியான வழித்துணையே என்ற பாடலின் மூலம் மக்கள் மனதில் ஆழ்ந்த இடத்தை பிடித்தார். இந்த படத்தின் வரவேற்பை அடுத்ததாக அவருக்குத் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த படங்கள் குவியத்தொடங்கின.
ஜி.வி. பிரகாஷ் (GV Prakash) , சிலம்பரசன் (Silambarasan) மற்றும் அதர்வா (Athrvaa) என பிரபல நடிகர்களின் படத்தில் இணைந்தார். இதில் இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 2 தமிழ்த் திரைப்படங்கள் கைவிடப்பட்டது. அவை STR 49 (STR49) மற்றும் டி54 (D54) ஆகிய படங்கள் தான்.




இதையும் படிங்க : அனுபவசாலிகள் இல்லையென்றால் எந்த கட்சியும் தேறாது… ரஜினிகாந்த் அதிரடி !
சிலம்பரசனின் STR 49 திரைப்படம் :
நடிகர் சிலம்பரசனின் முன்னணி நடிப்பில் தயாராகவிருந்த திரைப்படம்தான் STR49. இந்த படத்தை பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவிருந்தார். மேலும் இப்படத்தை டான் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வந்தார். இந்த படத்தில் நடிகர் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் நடிக்கவிருந்தார். இந்தப் படத்தின் ஷூட்டிங் பூஜைகள் கடந்த 2025, மே மாத தொடக்கத்தில் நடைபெற்றது. இதன் காரணமாக இப்படமானது கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : லியோவில் லோகேஷ் என்னை வீணடித்துவிட்டார்.. நடிகர் சஞ்சய் தத் குற்றச்சாட்டு!
தனுஷின் டி54 திரைப்படம் :
நடிகர் தனுஷின் நடிப்பில் புதியதாக உருவாகவிருக்கும் படம் டி54. இப்படத்தைப் போர் தொழில் படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கவுள்ளார். மேலும் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகள் சமீபத்தில் நடைபெற்றது . இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர்தான் நடிக்கவிருந்தாராம்.
பின் சில காரணங்களால் இந்த படத்தில் நடிகை மமிதா பைஜூவை படக்குழு கதாநாயகியாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2025, ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காயடு லோஹரின் இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
இப்படியாவது நடிகை கயாடு லோஹர் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட இரு முக்கிய படங்களில் நடிக்கவிருந்தார். இந்த இரு படங்களுக்கும் அவருக்குக் கைகொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் நடிகை கயாடு லோஹர் மலையாளத்தில் டோவினோ தாமஸுடன் புதிய படத்தில் இணைந்து நடித்து வருகிறார். மேலும் தமிழில் ஜி.வி. பிரகாஷுடன் இமார்டல் மற்றும் அதர்வாவுடன் இதயம் முரளி போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.