அவர் மருமகளா போக வேண்டியது.. இளையராஜாவை விமர்சித்த வனிதா!
இசையமைப்பாளர் இளையராஜா, தனது பாடலை அனுமதியின்றி "மிஸஸ் அண்ட் மிஸ்டர்" படத்தில் பயன்படுத்தியதாக வனிதா விஜயகுமார் மீது வழக்கு தொடர்ந்தார். இதற்கு பதிலளித்த வனிதா, இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதாகவும், பாடலின் உரிமை தொடர்பாக அனுமதி பெற்றதாகவும் கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மிஸஸ் அண்ட் மிஸ்டர் (Mrs And Mr) படத்தில் தனது இசையமைப்பில் உருவான பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக இசைஞானி இளையராஜா (Ilayaraaja) தொடர்ந்த வழக்கிற்கு அப்படத்தின் இயக்குநரும், நடிகையுமான வனிதா விஜயகுமார் (Vanitha Vijayakumar) பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் பழம்பெரும் கலைஞரான விஜயகுமார் – மறைந்த நடிகை மஞ்சுளா தம்பதியினரின் மகளான வனிதா விஜயகுமார் ஆரம்ப காலக்கட்டத்தில் தமிழில் சில படங்களில் மட்டும் ஹீரோயினாக நடித்தார். அதன்பின்னர் தனிப்பட்ட வாழ்க்கை காரணமாக திரைத்துறையில் பெரிதும் தலைக் காட்டாமல் இருந்தார். இதன்பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரசிகர்களிடம் பிரபலமாக தொடங்கினார். அதன்பின்னர் தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் வனிதா விஜயகுமார் இயக்குநராகவும் களம் கண்டுள்ளார்.
மிஸஸ் அண்ட் மிஸ்டர் படம்
ஏற்கனவே தயாரிப்பாளராக வனிதா, ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் ரசிகர் நற்பணி மன்றம் என்ற படத்தை 2015 ஆம் ஆண்டு தயாரித்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் அவருடன் இணைந்து மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இப்படத்தை வனிதா இயக்கவும் செய்திருக்கிறார். வனிதாவின் மகளாக ஜோவிகா இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அடியெடுத்து வைத்திருக்கிறார்.
Also Read: விவாகரத்து தொடர்பான வதந்தி.. ஸ்டைலாக பதிலளித்த நயன்தாரா!




இந்த படத்தில் ஷகீலா, ஆரத்தி, பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், அம்பிகா, ஸ்ரீமன், கணேஷ்கர், பாத்திமா பாபு, மோகன் வைத்யா, செஃப் தாமு ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கும் இப்படம் 2025, ஜூலை 11ம் தேதி தியேட்டர்களில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இளையராஜா வழக்கு – வனிதா கொடுத்த பதில்
இந்த நிலையில் மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் நடிகை கிரண் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அந்த பாடல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “மைக்கேல் மதன காமராஜன்” படத்தில் இடம் பெற்ற “சிவராத்திரி” பாடலாகும்.இதற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ஏற்கனவே தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்துவதாக பல படங்களின் தயாரிப்பு நிறுவனம் மீது இளையராஜா வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த நிலையில் மிஸஸ் அண்ட் மிஸ்டர் படம் குறித்தும் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் மிஸஸ் அண்ட் மிஸ்டர் படம் ரிலீசை முன்னிட்டு வனிதா விஜயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் இளையராஜா வழக்கு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “நான் இளையராஜாவை நேரில் பார்த்து ஆசீர்வாதம் வாங்கினேன். விஷயத்தையும் கூறினேன். இளையராஜா ஒரு லெஜெண்ட். இசைக்கு அவர் கடவுள் மாதிரி. அவரை மிஞ்ச யாரும் இல்லை. அப்படிப்பட்ட கடவுளே நம்மிடம் கோபப்பட்டால் எவ்வளவு கஷ்டமாக இருக்கும்.
Also Read: நிறையக் கஷ்டங்கள்.. விஜய் சேதுபதிக்கு நடந்த சம்பவம்!
சின்ன வயதில் இருந்து நான் இளையராஜா வீட்டில் வளர்ந்திருக்கிறேன். சில விஷயங்களை பேச முடியாது. உண்மையை சொன்னால் தப்பாகி விடும். நாங்கள் பாடலின் உரிமை தொடர்பாக சோனி மியூசிக்கிடம் அனுமதி பெற்றிருக்கிறோம். நியாயமாக பார்த்தால் அவர்கள் மீது தான் வழக்கு போட வேண்டும். நான் அவர் சொன்னபடி நேரில் சந்தித்து அனுமதி கேட்டேன்.
இளையராஜா வீட்டில் நான் வளர்ந்த நிலையில், பூஜையெல்லாம் செய்திருக்கிறேன். அவரின் மனைவி ஜீவா கையால் லாக்கர் சாவி வாங்கி நகைகளை எல்லாம் எடுத்து அம்மன் சிலைக்கு போட்டு வழிபாடு செய்யும் அளவுக்கு உரிமை இருந்தது. அந்த குடும்பத்தில் நான் ஒருத்தி. மருமகளாக செல்ல வேண்டியது” என வனிதா தெரிவித்தார்.